புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 23, 2018)

அழுத்தும் சுமைகளை தள்ளிவிட்டு..

எபிரெயர் 12:1

பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமை யோடே ஓடக்கடவோம்;.


இருட்டுவதற்கு முன்னதாக, கால்நடையாக அடுத்த ஊருக்கு சென்ற டைய வேண்டும். போகும் இடமோ தொலைவிலுள்ளது, பாதை கரடு முரடானதும், பிரயாணத்தில், காட்டு மிருகங்களாலும், கள்வர்களாலும் பல பயங்கரங்களும் உண்டு. அதற்கு மேலாக நாங்களோ எங்கள் மேல் அதிக சுமைகளை ஏற்றக் கூடாது என ஒரு மனிதன் தன்னுடன் வரும் நண்பனுக்கு கூறினான். இந்த பூலோகத்திலே வாழும் நாங்கள் பர லோகத்தை நோக்கி யாத்திரை செய்து கொண்டிருக்கின்றோம். அந்த யாத்தி ரையிலே வேண்டிய அளவிற்கு சவா ல்கள் உண்டு. இந்த உலகத்திலே உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு, திடன் கொள்ளுங்கள் நான் உலக த்தை ஜெயித்தேன் என இயேசு கூறி யிருக்கின்றார். எனவே பரலோக யாத் திரிகளாகிய நாம் அநாவசியமற்ற சுமைகளை எங்கள் மேல் ஏற்றிக் கொள்ளக்கூடாது. இந்த உலகத்திலே ஒரு மனிதன் சவால்களை எதிர்நோக் கும் போது, அவற்றை மேற்கொண்டு சமாதானமாக வாழ்வதற்கு பணம் அவசியம் என்று ஐசுவரியவனாகும்படி பிரயாசப்படுவனாகில், அப்படிப்பட்ட மனநிலை முற்றிலும் தவறா னது. ஏனெனில், பணமோ பொருளோ மனிதர்களுக்கு சமாதான த்தைக் கொடுப்பதில்லை.  அதில் கண் வைத்து அதற்காக கடுமையாக உழைக்கும் போது, பணம் மட்டுமல்ல, பணத்துடன் இணைந்துள்ள இந்த உலக கண்ணிகளும் அதனுடன் சேர்ந்து வரும். அந்த கண்ணிகள் நாங்கள் போகும் பாதையை பாசிபடிந்த நிலம் போல மாற்றிவிடும். பொருளாதார ரீதியிலே நாங்கள் பல நிலைகளில் இருக்கலாம். ஏழைகளாக இருக்கலாம் அல்லது ஐசுவரியவான்களாக இருக்கலாம். ஆனால் எங்கள் ஒவ்வொருவரினதும் ஆத்துமாவின் நன்மைக்காக, பண ஆசை (பொருள் ஆசை) எங்கள் உள்ளத்தில் இருக்கின்றதா இல்லையா என ஆராய்ந்து பார்க்க வேண்டும். பொரு ளாசை மட்டுமல்ல, வேறெந்த சுமைகளையும் ஏற்றிக்கொள்ளாதபடி, தேவன் நியமித்த ஒட்டத்தை பொறுமையோடு ஒடக்கடவோம்.

ஜெபம்:

அன்பான பிதாவே, மேன்மையான பரலோகத்தை நோக்கி பய ணம் செய்யும் வழியில், இன்னும் அதிக சுமைகளையும் பாரங்களையும் ஏற்றி,  நோக்கத்தை தவறவிடாதபடிக்கு என்னை காத்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33-34