புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 22, 2018)

ஒரு நாளும் வீணாகாது...

லூக்கா 18:29

இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவ தில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


ஒரு ஏழ்மையான தேவ ஊழியர், சபையின் குடும்பம் ஒன்றிலே ஏற்பட்ட சச்சரவை தீர்த்து வைக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தார். அங்கு சென்ற அந்த ஊழியர், தேவனுடைய வார்த்தைகளை மையமாக வைத்து ஆலோசனைகளை கூறினார். ஊழியர் தன் பக்கமாக சார்ந்து கொள்ளவில்லை என்று அறிந்த கணவன், ஊழியரைப் பார்த்து: உங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை கள் உண்டு, முதலில் அதை நீங்கள் தீர்க்கும் வழிகளை பார்க்க வேண்டும் என்று கூறினார். இந்த மனிதன் யாரு க்கு ஒத்தவன்? நேற்றைய நாளின் தியானத்தில் குறிப்பிடப்பட்ட, இயே சுவை பார்த்து இகழ்ந்து பேசின குற்ற வாளிக்கு ஒப்பாக இருக்கின்றான். அதாவது, முதலாவதாக உம்முடைய நிலையை சரி செய்து கொண்டு, பின்பு எனக்கும் உதவி செய்யும் என்பதைப் போலிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்;த்தையை கேட்டு அதற்கு கீழப்படியும் மனம் இல்லாதவர்கள். சுயநலமும், சுயநீதியும் நிறைந்தவர்கள். மகா பரிசுத்தராகிய எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துதாமே, எங்களுக்காக ஏழைக்கோலம் பூண்டு, மனிதகுலத்தின் பாவங்களுக்காக குற்றவாளியைபோல சிலுவையில் தொங்கினார். அதே போலவே, இன்று அநேக தேவ ஊழியர்கள், தங்கள் சுகபோகங்களை துறந்து, மற்றவர்கள் நித்திய வாழ்வின் வழியை அறிந்து கொள்ளும்படி, பல தியாகங்களை செய்கின்றார்கள். எடுத்துக் காட்டாக, குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்லாத (கல்சியம் போன்ற மூலப்பொருட்கள் மிகையான) இடங்களுக்கு, குடும்பம் சகிதம் சென்று, தங்கள் உடல் நலத்தைப் தியாகம் செய்து நற்செய்தியை அறிவிக்கின்றார்கள். காலப்போக்கில், இப்படிப்பட்ட ஊழியர்கள் வியாதியடையும் போது, அவர்களைப் பார்த்து உங்கள் நிலையை சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறுவது சரியாகுமா? இல்லை! கிறிஸ்துவுக்காக இழந்தவர்கள் தரித்திரர் ஆவதில்லை. பர லோகிலே அவர்களுடைய பலன் அதிகமாயிருக்கும்.

ஜெபம்:

சர்வ வல்லமையயுள்ள தேவனே, உம்முடைய ராஜ்யத்தின் சேவைக்காக, எதை இழந்தாலும்,  அது ஒருகாலமும் வீணாய் போவதி ல்லை என்று உணர்ந்து கொள்ளும்படியான இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:7-8