புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 21, 2018)

இன்றே இரட்சணிய நாள்!

லூக்கா 23:43

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.


இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளிலொருவன், நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.  மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக் கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக் குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பி க்கவில்லையே என்று அவனைக் கடி ந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்ய த்தில் வரும்போது அடியேனை நினை த்தருளும் என்றான். இயேசுவை ஆண் டவர் என்று ஏற்றுக் கொண்ட இந்தக் குற்றவாளியை பொதுவாக “நல்ல கள்வன்” என்று கூறிக்கொள்வார்கள். இந்த நல்ல கள்வன் என்று அழைக்க ப்படும் மனிதனுடைய முற்பட்ட வாழ்வு எப்படியாக இருந்தது, அல்லது இவன் குற்றம் இழைக்கத்தக்க சூழ் நிலைக்கு எப்படி தள்ளப்பட்டான் என்பதை பற்றி குறிப்பிடப்பட வில்லை. ஆனால், மரண வேதனைப்படும் வேளையில் இவனுக்கி ருந்த மனநிலையை சற்று சிந்தித்துப்பாருங்கள்: இவன் “இயேசுவே” ஆண்டவர் என்பதை திட்டமாக அறிந்து கொண்டான். இயேசு ராஜா வாய் அவருடைய ராஜ்யத்தில் வருவார் என்பதை விசுவாசித்தான். சுற்றியிருந்த மனிதர்களுக்கோ, ரோம வீரர்களுக்கோ பயப்படாமல், இயேசு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று அறிக்கையி ட்டான். தேவ பயம் உடையவனாக இருந்தான். தான் செய்த குற்ற த்திற்குரிய தண்டனையை நியாயப்படி அனுபவிக்கின் றேன் என்பதை ஏற்றுக் கொண்டான். தான் இயேசுவோடு கூட, அதே நாளில் சிலுவை யில் அறையப்படுவேன் என்பது அவனுக்கு தெரியாது, தனக்குக் கிடைத்த அருமையானதும் இறுதியானதுமான சந்தர்ப்பத்தை அவன் அசட்டை செய்யாமல் நித்திய வாழ்வை குறித்த நிச்சயத்தை, இயேசு விடமிருந்து பெற்றுக் கொண்டான். இயேசுவை இகழ்ந்த குற்ற வாளியைப்போல, நாமும் கிடைக்கும் இவ்அருமையான சந்தர்ப்ப த்தை அசட்டை செய்து நித்திய வாழ்வை இழந்து போகாமல், தாம திக்காமல் இயேசுவை கிட்டிச் சேருவோம்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, உம்மை நாடித் தேடுகின்ற எந்த மனிதனையும் நீர் புறம்பே தள்ளுகின்றவர் அல்ல. இன்றைய நாளில் நான் உம்மை இன்னும் கிட்டிச் சேர என்னை ஒப்புக் கொடுக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எசேக்கியல் 18:23