புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 20, 2018)

தேவனுக்கு பிரியமான பலிகள்

யாக்கோபு 4:10

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.


முன்னைய காலங்களிலே, அரச அவையிலே, அரசனை வாழ்த்தி புகழாரம் கூறுவதைப் பற்றி அறிந்திருக்கின்றோம். நல்ல ஆட்சி செய்கின்ற அரசனாக இருந்தாலும், துன்மார்க்கனாக இருந்தாலும், அந்த புகழாரத்தை வாசிப்பவர் அல்லது கூறுகின்றவர், சிறப்பான காரியங்களை கூறி, அரசனின் ஆட்சியின் மேன்மையை வர்ணனை செய்ய வேண்டும். கூறுவது உண்மை யாக இருந்தாலும், பொய்யாக இருந் தாலும், கூறுபவர் அதை விசுவாசித் தாலும் விசுவாசிக்காவிட்டாலும், மேன் மையான விடயங்களையே கூறவே ண்டும். இன்றைய நாட்களில், இவை கள் பல்வேறு வடிவங்களை பெற்று ள்ளது. தங்கள் சுய இலாபத்திற்காக, எதையும் செய்ய அல்லது சொல்ல ஆயத்தமுள்ளவர்கள், இவ்வுலகில் இரு க்கின்றார்கள். இவர்கள் இருதயம் உத்தமமற்றது. தேவனை துதிப்பதென்பது, அரசஅவையில் வாசிக்கும் புகழாரம் போன்றதல்ல. தேவனுடைய சமுகத்திலே, தேவனுக்கு பிரியமான உதடுகளின் கனி யாகிய ஸ்தோத்திரப்பலிகளை செலுத்த வேண்டும். எண்ணுக்கடங்காத ஸ்தோத்திர பலிகளை செலுத்தலாம், ஆனால் அவை தேவனுக்கு பிரியமில்லாததாக இருக்குமாயின், எண்ணிக்கையற்ற ஸ்தோத்திரபலி களை செலுத்துவதில் பிரயோஜனம் இல்லை. தேவ சமுகத்திலே எங்களைத் தாழ்த்தி, நாங்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்க வேண்டும். தன்னை மேன்மையானவன் என்று எண்ணி, பெருமையோடு தேவனைத் துதித்த பரிசேயன், தேவனிட மிருந்து நன்மையை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால், பாவியான ஆயக்காரன், தன் பரிதாப நிலையை ஏற்றுக்கொண்டு, நன்மை பெறும்படியாய், தன்னைத் தாழ்த்தி, உண்மையுள்ள இருதயத்தோடு தேவனைத் துதித்தான். அந்த ஆயக்காரன், தேவனிடம் நன்மையை பெற்று வீடு திரும்பினான். உலக வழக்கத்தின்படியான, வெறும் முக ஸ்துதியை மனிதர்கள் ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் சகலதும்    படைத்தவர், எங்கள் இருதயங்களை ஆராய்ந்தறிக்கின்றார். எனவே, தாழ்மையுள்ள இருதயத்தோடு கர்த்தருடைய சமுகத்திலே அவரை ஆராதியுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, தாழ்மையுள்ள இருதயத்தோடு, என் இரு தயத்திலுள்ளவைகளை, உள்ளபடி, உண்மையாக உம்முடைய சமுகத்தில் கூறி, உம்மை ஆராதிக்கும்படிக்கு என்னை வழிநடத்துவீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 29:13