புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2018)

நித்திய மேன்மையை அடையும்படி...

வெளிப்படுத்தல் 1:8

இருக்கிறவரும் இருந்த வரும்  வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்


ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், மாலை வேளைகளிலே, அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசமாக பாடங்களை சொல்லிக் கொடுத்து வந்தார். படிக்க ஆர்வமுள்ளவர்கள், தங்களுக்கு கிடைத்த சலுகையை பிரயோஜனப்படுத்திக் கொண்டார்கள். மேற்படிப்பைக் குறித்து, தன்னிடம் ஆலோசனை கேட்கும் சிறார்களுக்கு, பொறுமையுடன், புத்திமதிகளை கூறுவார். இவரிடம் கல்வி கற்க சென்றால், ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியதால், இந்த சலுகையை சிலர் தள்ளிவிட்டார்கள். ஏன் இந்த ஆசிரியர், தன்னிடம் வரும் மாணவர்களுக்கு, ஒழு க்கத்தை பேணிக் காக்கும்ப டியாய் எதிர்பார்க்கின்றார்? ஏனெனில் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி அடைவத ற்கு ஒழுக்கம் அவசியம். மாணவர்கள் இவரிடம் செல்லாவிட்டால் இந்த தன்ன லமற்ற உள்ளம் படை த்த ஆசிரியரு க்கு எந்த ந~;டமும் இல்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள். எங்கள் மீட்பரா கிய இயேசு, மனிதர்கள் பரலோகம் செல்லும் ஒரே வழியை காண்பித்திரு க்கின்றார். போகும் வழியிலே தொலைந்துவிடாதபடிக்கு, அங்கு சென்றடையும்வரை, எப்படி இந்த உலகிலே வாழ வேண்டும் என்னும் வழிமுறைகளை கற்றுத் தருகின்றார். ஏன் இந்த வழிமுறையை எதிர் பார்க்கின்றார்? அவருக்கு அதனால் என்ன இலாபம்? தேவன் எங்க ளில் அன்பாயிருக்கின்றபடியால், நாங்கள் சாத்தானின் தந்திரமான வலைக்குள் சிக்காதபடிக்கு வாழும்படிக்காகவே இந்த ஒழுங்கு முறை களை தந்திருக்கின்றார். ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு மனி தன், பரலோகம் செல்லாவிட்டால், அவன் சென்றடையும் இடம் நரகம். கர்த்தராகிய தேவன் தாமே, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கின்றார். அந்த ஆசிரியரிடம் சென்று நன்மையை பெற்றுக் கொண்ட புத்தியுள்ள சிறார்களைப் போல, நாங்களும் எங்க தேவனா கிய கர்த்தரைப் பற்றிக் கொள்ளுவோம். அவரை நம்பி அவர் வழிமு றைகளை மனதார கைக்கொள்ளுகிறவர்கள் நித்திய நித்தியமாய் பர லோகத்தில் நிலைத்திருப்பார்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கட்டளைகள், நியமங்கள், வழிமுறைகள் யாவும் என்னுடைய நன்மைக்கே என்ற மேன்மையை உணர்நது கொள்ளும் இருதயத்தை எங்களுக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 22:17-19