புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 15, 2018)

தேவன் தங்கும் ஸ்தலம்

1 கொரிந்தியர் 3:16

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமா யிருக்கிறாரென்றும் அறி யாதிருக்கிறீர்களா?


தேவனுடைய ஜனங்கள் என்று அழைக்கபட்ட இஸ்ரவேல் சந்ததியார் தங்களை அன்பு செய்த தேவனாகிய கர்த்தரை மறந்து, தேவர்கள் அல்லாத விக்கிரகங்களை வணங்கி, ஒடுக்கப்பட்டோர், சிறுமைப் பட்டோரின் நீதியை புரட்டி, திரளான பாதகங்களை செய்தார்கள். அவர்களுடைய பாவங்களை உணர்த்தும்படி அனுப்பப்பட்ட தீர்க்க தரிசிகளை, அசட்டை பண்ணி, பலரை துன்பப்படுத்தி, கொலை செய்தார்கள். இப்படியாக, தேவனுடைய நீடிய பொறு மையை அற்பமாக எண்ணி, நூற்றுக்க ணக்கான வருடங்களாக மிகுதியாய்ப் பாவஞ்செய்தார்கள். இதனால் தேவனா கிய கர்த்தர் அவர்களை புறஜாதியா ரிடம் ஒப்புக் கொடுத்தார். புறஜாதி யார் வரலாகாது என்று கூறப்பட்ட எருசலேம் தேவாலயமாகிய பரிசுத்த ஸ்தலத்துக்குள், தேவனையறியாதவர் களும், யுத்தவீரர்களும் உட்புகுந்து அதை உடைத்துப் போட்டார்கள். இதி லிருந்து நாங்கள் என்னத்தை கற்றுக் கொள்ளலாம்? ஸ்தலம் அல்ல முதன்மையாக மனு~னுடைய இருதயமே தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக காக்கப்பட வேண்டும். ஒரு இடத்தை எடுத்து, அதை அழகாக அலங்கரித்து, அதை காவல் போட்டு, அதை பரிசுத்த ஸ்த லம் என்று பெயரிட்டு, அந்த இடத்தை கனப்படுத்துவதால், அந்த இடம் பரிசுத்தமாகப் போவதில்லை. தேவன் தங்குகின்ற எந்த இடமும் பரிசுத்தமானது. ஆனால், பாதகங்களினாலும், பாவங்களினாலும் நிறை ந்த இருதயமுள்ள மனிதர்கள் மத்தியிலே தேவன் வாசம் செய்யமா ட்டார். எங்கள் இருதயம் தேவனுக்கு விரோதமானவைகளை சிந்தித்து செயலாற்றும் போது, நாங்கள் எங்கு கூடினாலும் தேவன் எங்களோடு இருக்க மாட்டார். அதனால் நாங்கள் ஆராதிக்கும் ஸ்தலம் எப்படி யாகவும் இருக்கலாம் என்று பொருள் அல்ல. கருப்பொருளானது, முதன்மையாக, எங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக உகந்ததாய் இருக்க வேண்டும். தேவனுடைய ஆவியானவர் எங்களுக்குள்ளே வாசமாயிருக்கின்றார். 

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என்னுடைய இருதயம் நீர் தங்கும் ஆலயம். அதை கெடுத்துப் போடாதபடிக்கு, உமக்கு உகந்த, தூய்மையான சிந்தனைகள் அதிலிருந்து வரும்படியாய், என்னை நடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 3: 15-16