புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 11, 2018)

மனநிறைவோடு பணி செய்வோம்

யோவான் 16:33

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலக த்தை ஜெயித்தேன். என்றார்.


“என்னுடைய மகனை, தேவனுடைய ஊழியக்காரனாக வர அனு மதிக்க மாட்டேன்” “இந்த ஜனங்களோடு யார்தான் ஊழியம் செய்ய முடியும்” இப்படிப்பட்ட வார்த்தைகளை பெற்றோர் கூறுவதை கேட்டி ருக்கின்றீர்களா? உபத்திரவம் மிகுதியினால், சில ஊழியர் கூட இப்ப டிப்பட்ட வார்த்தைகளை கூறிவிடுகின்றார்கள். சற்று சிந்தித்துப் பாரு ங்கள்! கர்த்தருடைய அன்பை சிந்தித்துப் பாருங்கள்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே, பாடுகள், அவ மானம், சிலுவை மரணம் தனக்கு முன் பாக இருக்கின்றது என்று அறிந்தும், தகுதியற்றவர்களாயும், முரட்டாட்டமுள் ளவர்களாயுமிருந்த எங்கள் ஒவ்வொரு வருடைய இடத்தையும் அவர் ஏற்றுக் கொண்டார். கர்த்தர்தாமே, பரலோக மேன்மையை துறந்து, ஏழை மனுஉ ருவை எடுத்து, இந்த பூமிக்கு வந்த போது, இந்த பூமியிலுள்ள ஜனங் கள் அவருக்கு செங்கம்பள வரவே ற்பை கொடுக்கவுமில்லை, அதை அவ ர்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கவுமில்லை. இன்று மனிதர்கள், சம் பூரணமாக் பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், உறவினர், நண்பர்கள், சபை விசுவாசிகள் தங்களைச் சூழ இருக்க வேண்டும் என்று எண்ணங் கொள்கின்றார்கள். கிறிஸ்துவைப் போல சம்பூரண மான நிலையை அடையும்படிக்காய் நாங்கள் நாள்தோறும் மறுரூ பமாக்கப்படவேண்டும். எங்களை சூழந்து கொள்ளும் சவால்களை நாங்கள் எப்படி முகங்கொடுக்கின்றோம் என்பது, எங்கள் நிலையை எங்களுக்கு வெளிப்படுத்தும். எனினும், இன்றும் தேவனுடைய பிள் ளைகள் சிலர், தங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு என்று அறிந்தும், தங்களை தேவனுடைய சேவைக்கு அர்ப்பணித்து, நாடுவிட்டு நாடு செல்கின்றார்கள். இவர்கள் கிறிஸ்துவுக்காக எதையும் செய்ய ஆயத் தமுள்ளவர்கள். அவர்களைப் போல நாங்களும், எப்படிப்பட்ட சவால் கள் எங்களை எதிர்த்து வந்தாலும், தாழ்மையுடனும் சாந்தத்துடனும், தேவனுடைய வார்த்தைகளின்படி அவைகளை மேற்கொண்டு மன நிறைவோடு பணியாற்றுவோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, தமக்கு வந்த எல்லா நிந்தனைகளையும் தாங்கிக் கொண்ட இயேசுவைப் போல,  நானும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் சவால்களை பணிவோடு மேற்கொள்ள கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:2-3

Category Tags: