புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 10, 2018)

பரலோகில் கைமாறு

லூக்கா 6:33

உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன?


இன்று பலரும் கைமாறு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தங்கள் கிரியைகளை நடப்பிக்கின்றார்கள். அதாவது, நான் ஒரு நன்மையை ஒருவருக்கு செய்தால், அவர் மறுபடியும் எனக்கு நன்மை செய்ய வேண்டும். அப்படியாக,  சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவர் நன்மை செய்யத் தவறினால், அவருடனான நட்பு நாளடைவில் குறைந்து போய்விடுகின்றது. நாங்கள் யாவரும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால், பரிசுப் பொருட் களும், கைமாறு பெற்றுக் கொள்வ தும் எங்கள் உறவின் மையப் பொரு ளாக இருக்கக்கூடாது. நாங்கள் எங் கள் சொந்த பந்தங்களோடு கூடி சந் தோ~மாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அவர்கள் வசதி உள்ளவர்க ளாக இருந்தால், அதற்குரிய கைமாறை இந்தப் பூமியிலே அவர்கள் திரும்ப செலுத்திவிடுவார்கள். எங்கள் கைமாறு பரலோகில் மிகுதியாய் இருக்கும்படி நாங்கள் என்ன செய்யலாம்? அன்றியும் இயேசு தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவி ருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோத ரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அய லகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.  நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக் கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்;. நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார். பிரியமானவர்களே, இந்த வார்த்தைகள், எங்கள் கர்த்தரும் மீட்பருமாகிய இயேசுவின் வார்த் தைகள். எனவே, உங்கள் வீட்டில் நன்மை உண்டாயிருக்கும் போது, அதை ஏழை எளியவருடன் பகி ர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பொருளாதரா நிலை மட்டுமட்டாக இரு ந்தாலும், உங்களை பார்க்கிலும் பரிதபிக்கக்கூடிய நிலையிலே இருப் பவர்கள் ஏராளமாய் உள்ளார்கள். உங்களுக்குண்டான பெலத்தின்படி, ஒரு வேளை ஆகாரத்துக்கான உதவியையாயினும் வறியவர்களுக்கு கொடுங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, எந்தத் தகுதியும் இல்லாத என்னை, உம்முடைய நித்திய ராஜ்யத்திலே பங்காளியாக அழைத்தீர். அந்த அன்பை நான் ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ளும்படியாய் என்னை நடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரிந்தியர் 9:6