புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 07, 2018)

மாசில்லாத இருதயம்

நீதிமொழிகள் 22:11

சுத்த இருதயத்தை விரு ம்புகிறவனுடைய உதடு கள் இனிமையானவை கள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.


யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?  கைகளில் சுத்தமுள்ளவனும் இருத யத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே என்று சங்கீதப் புத்தகத்திலே வாசிக்கின்றோம். மாசில்லாத இருதயத்தை உடையவர்கள் யார்? இந்த உலகிலே, தங்கள் இருதயத்தில் தோன் றுவதையெல்லாம் அப்படியே வெளியே பேசிவிடுபவர்களை இருத யம் சுத்தமுள்ளவர்கள் என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படு த்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான் என்று வேதம் கூறுகின்றது. இயேசு சொன்னார்: எப் படியெனில், இருதயத்திலிருந்து பொல் லாத சிந்தனைகளும், கொலை பாதகங் களும், விபசாரங்களும், வேசித்தனங்க ளும், களவுகளும், பொய்ச்சாட்சிக ளும், தூஷணங்களும்    புறப்பட்டுவரும். இவைகளே மனு~னைத் தீட்டுப்படுத் தும்;. எனவே மனிதனின் மனதில் தோன்றும் காரியங்களை எல்லா வற்றையும் வெளியரங்கமாக பேசுவதோ, கிரியையில் நடப்பிப்பதோ, அவைகள் இருதயத்தில் வைத்து இரைமீட்பதோ அவனுடைய இருத யத்தை சுத்தப்படுத்தாது. எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக் குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. மேலும் ஒருவனுடைய இரு தயத்தின் நினைவு எப்படியோ அவன் அப்படியே இருக்கின்றான் எனவும் எழுதப்பட்டுள்ளது. ஆதலால், தேவனுடைய வார்த்தையின்படி எப்போதும் நன்மையானவைகளையே இருதயத்தில் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். எல்லாக் காவலோடும், தேவனுடைய வார்த் தைகளின்படி இருதயத்தைக் காத்துக்கொண்டால், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும். இப்படிப்பட்ட இருதயத்தை விரும்புகிறவன் வாயிலிருந்து இனிமையான வார்த்தைகள் பிறக்கும். அதை ராஜா விரும்புவான். இப்படிப்பட்டவனோடு ராஜா சிநேகமாகயிருப்பான். இந்த உலகத்திலு ள்ள ராஜாக்கள் மாத்திரமல்ல, ராஜாதி ராஜாவா கிய தேவனும் அதை விரும்புகின்றார். இருதயத்தில் சுத்தமுள்ளவ ர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என்னுடைய வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானங்களும் உமது சமுகத்திலே பிரியமாக இருக்கும்படி, என் இருதயத்தை காத்துக் கொள்ள என்னை வழிநட த்துவீராக.  இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8