புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 06, 2018)

தேவன் ஏற்றுக் கொள்வாரா?

சங்கீதம் 51:17

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;, தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.


துதி ஆராதனைகளைக் குறித்து இன்று பலரும் பலவிதமாக பேசிக் கொள்வார்கள். இன்று இணையத் தளத்திலே ஒரு துதி ஆராதனை யைப் பார்த்தேன், மயிர்கூச்செறிந்து பரவசம் அடைந்தேன். இன்று துதி ஆராதனை எனக்கு பிடிக்கவில்லை, பாடல்கள் நன்றாக இல்லை அல்லது இசைக்கருவிகள் சீராக மீட்டப்படவில்லை என ஆராதனையை வழிநடத்துகின்றவர் கள், இசைகருவிகளை மீட்கின்றவர் கள் மீது குற்றத்தைப் போட்டுவிடுவார் கள். சர்வ வல்லமையுள்ளவரும் மகா பரிசுத்தருமான எங்கள் தேவனாகிய கர்த்தருக்கே எங்கள் துதி பலிகளை செலுத்துகின்றோம். எனவே, முதலாவ தாக, எங்கள் துதிபலியை தேவன் அங் கீகரிக்க வேண்டும். தேவனுக்கு செலு த்தும் ஆராதனையை அவர் அங்கீக ரிக்காவிட்டால், மனிதர்கள் துதி ஆராத னையை அங்கீகரிப்பதாலோ, அல்லது நான் பரவசமடைவதாலோ, மயிர்கூர்ச் செறிவதாலோ அல்லது எனக்கு பிடிப்பதாலோ எந்தப் பிரயோஜ னமும் இல்லை. தேவன் எங்கள் ஆராதனையை ஏற்றுக் கொள் ளாவிட்டால், இசை கருவிகளை நேர்த்தியாய் வாசிப்பதும், வழிநட த்துபவர் இனிமையாய் பாடுவதும் பேசுவதும் விருதா. ஆராதனைக்கு வரும்போது, வழிநடத்துபவர்கள், இசை கருவிகளை மீட்கின்றவர்கள், சபையோர் யாவரும் ஆயத்தத்தோடு வரவேண்டும். ஒரு மனதோடு துதிக்க வேண்டும். துணிகரமான வார்த்தைகளையோ, செயல்க ளையோ தேவ சமுகத்தில் பேசவோ, செய்யவோ துணியக்கூடாது. இவை யாவும் நல்ல ஒழுங்கு முறைகள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, என்னுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக சரியாக இருக்க வேண்டும். துதி ஆராதனையின் வேளையில், நான் ஏறெ டுக்கும் துதிபலியை, தேவன் ஏற்றுக் கொண்டார் என உங்களால் நிச்சயமாக கூறமுடியுமா? ஆபேலின் பலியை தேவன் அங்கீகரித்தது போல எங்கள் துதி பலிகளையும் தேவன் அங்கீகரிக்கும்படியாய் சற்று உங்கள் மனநிலையை ஆராய்ந்து பார்த்து, தேவன் முன்னிலை யிலே உங்களை தாழ்த்துங்கள்.  

ஜெபம்:

மகா பரிசுத்தமுள்ள தேவனே,உம்முடைய சமுகத்திலே,என்னை தாழ்த்தி, உண்மையுள்ள இருதயத்தோடு, பரிசுத்த அலங்காரத்தோடும் என் துதிபலிகளை உமக்கு செலுத்த எனக்கு கற்றுத்தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 4:24