புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 05, 2018)

ஜீவன் தரும் திரு வார்த்தைகள்

எபேசியர் 5:4

அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.


தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. வேதவாக்கிய ங்களெல்லாம் தேவஆவியினால் அரு ளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாக வும் இருக்கும்படியாக,  அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலு க்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ள வைகளாயிருக்கிறது. இப்படியாக தேவ னுடைய வார்த்தைகளின் மேன்மை யானது, அவருடைய நாளுக்கென்று எங்களை தகுதிப்படுத்துகின்றது. வேத வார்த்தைகளையும், சபையிலே கூறப்படும் தேவ செய்தியையும், ஆர்வமாய் கேட்டு, அவ் வார்த் தைகளை விசுவாசித்து, அதன்படி கிரியைகளை நடப்பிப்பவர்கள் தேவ மகிமையை காண்கின்றார்கள். ஆனால், தேவ வார்த்தைகளை கேட்பவர்களில் சிலரோ, எப்போதும் சுவாரசியமாக பேச வேண்டும், எப்போதும் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று, தேவனுடைய வார்த்தைகள் அல்லது தேவ செய்திகளை கேட்ட பின்பு, கேட்டதை மையமாக வைத்து, பலர் சிரிக்கும்படி நகைச்சுவையான கதைகளை கூறுவார்கள். தேவனுடைய வார்த்தைகள் நகைச்சுவைக்கு உரியதல்ல. நாங்கள் சிரித்து சந்தோ~மாக இருப்பது நல்லது. அந்தச் சிரிப்பு, தேவனுடைய வார்த்தையின் கருப்பொருளை எந்தவிதத்திலும், எங்க ளுடைய வாழ்வையும், மற்ற வர்களுடைய வாழ்வையும், மாற்றிப்போ டாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பேச்சு க்கள் புத்தியீனமானதும், தகாதவைகளுமாயிருக்கின்றது. இப்படியான நகைசுவைகள் நாளடைவில், உங்களை அறியாமலே பரியாசமாக மாறிவிடும். எனவே கருத்துடன் தேவனை ஆராதித்து, உங்கள் வாழ் வில் தேவ சித்தம் நிறைவேறும்படி எப்போதும் விழிப்புள்ளவர்களாயிருங்கள். 

ஜெபம்:

அன்பான பரலோக தேவனே, எங்கள் ஆராதனையின் கருப்பொருளை மாற்றும்படியான புத்தியீனமான சம்பாஷணைகளில் நான் பங்கேற்காதபடிக்கு,  என்னைக் காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:29