புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 04, 2018)

வேதத்திலே தியானமாயிருங்கள்...

2 பேதுரு 3:3

முதலாவது நீங்கள் அறி யவேண்டியது என்னவெ னில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின் படியே நடந்து,


துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரா மலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனு~ன் பாக்கியவான். யார் இந்த பரியாசக்காரர்? இவர்கள் தங்கள் மனச்சாட்சியிலே சூடுண்ட பொய்யர்கள். இவர்கள் எப்போதும் எந்நேரமும் நீதியின் வழியிலே நடக்கின்றவர்களையும், நட க்க எத்தனிக்கின்றவர்களையும் தடுப் பதற்காக, பல நியாயங்களை கூறிக் கொள்வார்கள். இவர்கள் தங்களை அறியாமலே, சாத்தானின் ஆளுகைக் காக  உழைக்கின்றவர்கள். சாத்தான், தந்திரமுள்ளவன், எனவே, பரிகாசம் என்று கூறும் போது, அவை எப் போதும் நகைப்புக்குரியதும், கேலித்த னமானதாகவும் இருக்கும் என்பது பொருள் அல்ல. தெளிந்த தண்ணீரு க்குள் தெளிந்த வி~ம் சேர்க்கப்பட்டதுபோல, பரியாசக்காரரின் உத ட்டின், நகைப்புடன்,  வசைச்சொல், பழிச்சொல், வடுச்சொல், குத்து வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருக்கும். துன்மார்க்கத்தின் கிரியைக ளாகிய, மோகபாவம், துர்இச்சைகள், மதுபானம்பண்ணல், களியாட்டுச் செய்தல், வெறிகொள்ளல், அருவருப்பான விக்கிரகாராதனை செய் தல் போன்ற மாயைக்குள் அவர்களோடேகூட நீங்கள் விழாமலிரு க்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூ~pப்பார்கள். இவர்களுடைய பேச்சுக்கள், இந்த உலகத்திலுள்ளவர்கள் பலருக்கு யதார்த்தமாய்த் தோன்றும். இவர்கள் வேத வார்த்தைகளை எடுத்து, தங்கள் சொந்த நோக்கங்கள் நிறைவேறும்படி புரட்டுவார்கள். கர்த்தர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிரு~;டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். பிரியமானவர்களே, இவை யாவும் முன்கூட்டியே எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே தேவ காரியங்களைக் குறித்து விழிப்புடன் இருங்கள். வேத த்;தை இரவும் பகலும் தியானியுங்கள், உங்கள் மனம் புதிதாகிறதி னாலே மறுரூபமாகுவதில் நோக்கமாயிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, உம்மைவிட்டு தூரம் செல்லும்படியாய் பேசப்படும் பரியாசக்காரருக்கு நான் செவிசாய்க்காமல், உம்முடைய வார்த்தைகளை இரவும் பகலும் தியானம் செய்து, அதன்படி நடக்க உதவி செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6