புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 31, 2018)

மகத்துவமுள்ள பதவி எதற்கு?

1 யோவான் 3:18

என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல,கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூரக்கடவோம். 


முன்னே நாங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப் பொழுதோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழியாக, அவருடைய ஜன ங்களாக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள் இரக்கம் பெறாதவர்களாயி ருந்தோம். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கின்றோம். தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்ட மாயும், பரிசுத்த ஜாதியாயும், அவரு க்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கி ன்றோம். கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி, ஞான ஸ்நானம் பெற்று, தேவனுடைய கட்ட ளைகளின்படி வாழ்பவர்களுக்கு இவை யாவும் உண்மை. ஆனால், தகுதியற்ற மனிதர்களுக்கு, அதாவது என்னையும் உங்களையும் போன்ற மனிதர்களுக்கு, ஏன் தேவன் இந்த பதவியை கொடு த்தார்? சற்று சிந்தித்துப் பாருங்கள்!  இந்த பூமியிலே மற்றவர்களை நியாந்தீர்க்கும்படிக்காக இப்படி செய்தாரா? நான் நீதிமான், அயலவர்கள் எல்லாம் பாவிகள் என்று பெருமை கொள்ளும்படி செய்தாரா? இல்லை! அப்படியான எண்ணம் சிறிதளவேனும் உங்களிடம் இருக்கும் என்றால் நீங்கள் கர்த்தருடைய வழிகளை குறித்துத் தப்பான எண்ணங் கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல ஸ்தானதிபதிகளாக, அவருடைய இரட்சிப்பின் செய்தியை, மனத்தாழ்மையுடனும், சாந்த த்துடனும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். கர்த்தர் எங்களுக்கு காட்டி வருகின்ற அன்பை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண் மையினாலும் அன்புகூரக்கடவோம் இதனால், நாங்கள் முன்பு செய்த துர்கிரியைகளை போல, அவர்கள் இப்போது செய்யும் துர்கிரியைக ளுக்கு நாங்கள் பங்கேற்க வேண்டும் என்பது பொருள் அல்ல. உங்களை கறைப்படுத்தாதபடிக்கு தேவனுடைய அன்பை மற்றவர்க ளுக்கு காண்பிப்பதற்கு பல வழிகள் உண்டு. முதலாவதாக, எங்கள் உள்ளத்திலே, அழிந்து போகின்ற ஆத்துமாக்களைக் குறித்த பாரம் உருவாக வேண்டும். எவருடைய வாழ்கையையும் நியாந்தீர்க்காமல், அவர்களின் விடுதலைக்காக பரிந்துபேசி ஜெபிக்க வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, நீர் எங்களுக்கு காட்டிவரும் அன்பும் நீடியபொறுமையும் பெரியது. அந்த அன்பையும்,  நீடிபொறுமையையும் நான் மற்றவர்களுக்கு காண்பிக்கும்படியாக நீர் என்னை வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:20-21