புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 30, 2018)

பெரிதான ஆசீர்வாதம்

1 நாளாகமம் 4:10

தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி,  உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் 


யூதா கோத்திரத்திலே, ஒரு ஸ்திரி, நான் துக்கத்தோடே மகனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.  இந்த யாபேஸ், தன் உள்ளத்தில் உள்ளதை தேவனுக்கு தெரிய ப்படுத்தினான். அவன் ஆசீர்வாதத்தையும், தன் எல்லையைப் பெரு க்குவதையும் மாத்திரம் தேவனிடத்தில் கேட்கவில்லை. அவனுடைய வேண்டுதலின் பிற்பகுதி, அவன் தேவ னைக் குறித்தும், இந்த உலகத்தைக் குறித்தும் கொண்டுள்ள அறிவை வெளி ப்படுத்துகின்றது. அதாவது, தேவனு டைய கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அத ற்கு என்னை விலக்கிக்காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்;. இந்த உலகில் ஆஸ்தி மட்டும் பெருகுவது ஆசீர்வாதம் அல்ல. அதில் அகப்படுகி ன்றவர்கள் தங்களுக்கு கண்ணிகளை வரவழைத்துக் கொள்கின்றார்கள். தேவ னுடைய ஆசீர்வாதத்திற்கு காரணம் உண்டு. அவர் விருதாவாய் ஒரு காரி யத்தையும் செய்கின்றவர் அல்ல. அவ ருடைய ஆசீர்வாதத்திற்குள் சமாதானம் உண்டு. நீதி உண்டு, நீதியின் கிரியைகள் உண்டு. பொல்லாங்கனாகிய பிசாசின் தீங்குகளில் அகப் படாதபடி, தேவனுடைய கரம், அவருடைய பாதுகாப்பு, அவருடைய வழிநடத்துதல் எங்களோடு இருப்பதே மிகப் பெரி தான ஆசீர்வாதம். தேவனுடைய வழிநடத்துதல் ஒருவனோடு இருக்க வேண்டும் என் றால், அவன் தேவனுக்கு முற்றும் கீழ்ப்படிகின்றவனாக இருப்பான். தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அதை செய்ய ஆவலாக இரு ப்பான். இந்த யாபேஸ், இவைகளையே தேவனிடம் கேட்டான். அதைப் போல எங்கள் ஜெபமும் இருக்கவேண்டும். நாங்கள் ஐசுவரி யவான்களாகவோ அல்லது ஏழைகளாகவோ இருக்கலாம். தேவனு டைய கரம் எங்களோடு இருக்காவிட்டால், நாங்கள் தேவனுடைய சித் தத்தை நிறைவேற்ற முடியாது. நாங்கள் எந்த நிலையில் இருந்தாலும் தேவனில்லாத வாழ்க்கையில் சமாதானம் நிலைத்திருக்காது. யாபே சைப் போல தேவன் உங்களோடிருப்ப தையே வாஞ்சித்து நாடுங்கள்.

ஜெபம்:

சகலமும் படைத்த தேவனே, உம்முடைய பிரசன்னம் எங்க ளோடு இருந்து எங்களை வழிநடத்துவதே, இந்த உலகிலே மிகப்பெரி தான ஆசீர்வாதம். நான் எப்போதும் உம்முடைய சித்தம் செய்ய என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத்திராகமம் 33:16