புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 29, 2018)

மனிதர்கள் தூற்றும் போது

யோவான் 15:19

நீங்கள் உலகத்தாராயிரு ந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலு ம், நான் உங்களை உலகத் திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலு ம், உலகம் உங்களைப் பகைக்கிறது.


காரணமின்றி மனிதர்கள் உங்களை பகைப்பதையும், நகைப்பதையும்  உங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருக்கின்றீர்களா? ஆலயத்திற்கு சென்று மெய்யான தேவனை ஆராதித்து, தீய பழக்கங்களைவிட்டு விலகியிருப்பதால், அல்லது தீய பழக்கங்களைவிட்டு விலக முயற்ச்சி எடுப்பதால், நற்செய்தியை கூறுவதால், உண்மையை பேசுவதால், சிலவேளை களில் நாங்கள் மற்றவர்களின் நகைப்புக்கு ஏதுவாகின்றோம். அவர்களுடைய நகைப்பு, அவர்கள்; அதிருப் தியை அல்லது பகையை காண்பிக்கும் ஊடகமாக இருக்கின்றது. அப்படி நடந்திருந்தால் ஆச்சரியப்படாதிருங் கள். ஏனெனில் “என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்ச ரியப்படாதிருங்கள்”  என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. காயீன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய் தான்? தன் கிரியைகள் பொல்லாத வைகளும், தன் சகோதரனுடைய கிரி யைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்த தினிமித்தந்தானே. இயேசு சொன்னார்: உலகம் உங்களைப் பகை த்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். கருப்பொருளாவது, உலகத்தார் எங்களை பகைப்பதும் நகைப்பதும் புதுமையான காரியம் அல்ல. அதைக் குறித்து மேலதிகமாக ஆராய்ச்சி செய்யாமல், அப்படியான நேரங்களிலே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என வேதம் கூறும் ஆலோசனைகளை ஆராய்ந்து, அவைகளின்படி நடவுங்கள். ஒருவர் எங்களை வீட்டிலோ, வெளியிலோ எங்கள் விசுவாசத்தைக் குறித்து நகைக்கும் போது, கோபம் கொண்டு பதிலடி கொடுக்காதிருங்கள். முடிந்தால், அமைதலாக பதில் கூறுங்கள். அப்படி செய்ய முடியா விட்டால், நீங்கள் எதையுமே பேசாதிருங்கள். அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.  சந்தர்ப்பங் கிடைத்தால் அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். பரமபிதா தன் சம்பூரணத்திலிருந்து எடுத்து எங்களுக்கு தருவதுபோல நீங்களும் நன்மை செய்ய நாடுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தேவனே, இந்த உலகம் எங்களை காரணமின்றி தூற்றும் போது,  நாங்கள் இயேசுவிடம் கற்றுக் கொண்ட தெய்வீக குணாதிசயங்களை காண்பிக்கும்படியாக எங்களை வழிநடத்தும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 3:11-16