புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 28, 2018)

அழியாத சுதந்திரத்தின் பங்காளி

எபிரெயர் 2:4

தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொ ள்ளுவோம்.


இந்த உலக செல்வங்களால் நிறைந்த கோடீஸ்வரரின் குமாரர்கள் தங்கள் தந்தை விருப்பதைத் திருப்திப்படுத்த முந்திக்கொள்வார்கள். தங்கள் தந்தை துன்மார்க்கனாகவோ சன்மார்க்கனாகவோ இருந்தா லும், அதைப் பொருட்படுத்துவதில்லை. சில வேளைகளிலே, நெறிமு றையற்ற காரியங்களை செய்யும்படி தந்தை கூறினாலும் அதை நிறைவேற்ற ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஏன் அப்படி செய் கின்றார்கள்? இந்த அறிவை சற்று எண்ணிப்பாருங்கள்! அவர்களின் பொறு மையை உற்று நோக்கிப் பாருங்கள். அழிந்துபோகும் இந்த உலகின் செல் வத்திற்கு எப்படியாது வாரிசாக வர வேண்டும் என்ற விடாமுயற்சியுடன் செயற்படுகின்றார்கள். ஆனால், அழி யாததும், மாசற்றதுமான, உன்னதமான, விலைமதிக்கமுடியாத பொக்கி~மா கிய நித்திய வாழ்வை அடையும்படிக் கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழியாக எங்களை தம்முடைய புத்திர ர்களாகவும், பரலோக ராஜ்யத்தின் உடன்பங்காளிகளாகவும் ஆகும்படிக்கு அழைத்த அழைப்பை இன்று அநேகர் அற்பமாக எண்ணுகின்றார்கள். உலக பொக்கி~ங்களை அடையும்படி முயற்சி செய்யும் துன்மார்க்கனும் சன்மார்க்கனும் அதிகதிகமாய் உழைப்பானாக இருந்தால். நன்மை செய்யும் பிதாவாகிய தேவனின் பொக்கி~த்தை பெற்றுக் கொள்ள அழைக்கப்பட்ட நாங்கள் எவ்வ ளவு கவனமுள்ளவர்களாக உழைக்க வேண்டும். இந்த உலகத்திலு ள்ள தகப்பன்மார், உலக ஐசுவரியத்தை அடையும்படிக்கு நெறிமுறை யற்ற காரியங்களை செய்யும்படி எதிர்பார்க்கலாம் அல்லது தவறான வழிமுறைகளை கையாளலாம். ஆனால் எங்களை அழைத்த பரமபிதா தம்முடையவர்களை நேசிக்கின்றார். அவர் பரிசுத்தமுள்ளவர், ஒருவரும் கெட்டுப்போவது அவருடைய சித்தமல்ல. எனவே இந்த மகத்தான அழைப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தந்தையே, அழியாத நித்தியமான உம்முடைய ராஜ்ய த்தின் உடன்சுதந்திரராகும்படி, நீர் தந்த இந்தப் பெரிதான சிலாக்கிய த்தின் மேன்மையை உணர்ந்து கொள்ளும்படியான இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10