புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 25, 2018)

சுத்த மனசாட்சியின் புலன்கள்

ஏசாயா 30:15

அமரிக்கையும் நம்பிக் கையுமே உங்கள் பெல னாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;.


உத்தமமான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு தகப்பன், தான் அன் புகாட்டி வளர்த்த தன் ஒரே மகளை பற்றி, காரணமில்லாமல் அவதூ றாக பேசிய அயலவன் மேல் கடும் கோபம் கொண்டான். அவரு டைய கோபத்திற்கு தகுந்த காரணங்கள் உண்டு. உத்தமமாய் வாழ்; கின்ற தந்தையின் சுத்தமனசாட்சி பேசும் வார்த்தைகளை மாம்சத்தின் கிரியையாகிய கோபம் மழுங்கச் செய் துவிடுகின்றது. பரிசுத்த வேதாகமத் திலே கற்றுக்கொள்ளும் வார்த்தைகள் இருதயத்தில் கிரியையை நடப்பிக்கா தபடிக்கு, மனச்சாட்சியின் செவிகளை கோபம் அடைத்;துவிடும். தேவ செய் தியை கேட்கும் போது, இவருடைய இருதயமாகிய நிலம் வழியோரம் போல இருப்பதால், தேவ வார்த்தை கள் பலனளிக் காமல் போய் விடுகின் றது. பழைய மனிதனுக்கு (மாம்சமான மனு~ன், மாம்ச கிரியைகள், உலக போக்குகள்) சுபாவம், இவருடைய கோபத்தை நியாயப்படுத்தும். எனவே தான் நினைத்த காரியத்தை முடிக்கும்வரைக்கும் அவர் அதிலே நாட்டமாக இருப்பார். இதனால், உத்தமமாக வாழ்ந்த இவர், தன் வாழ்வில் பல விபரீதங்களை  வரவ ழைத்துவிடுகின்றார். பிரியமானவர்களே, மாம்சத்தின் கிரியைகள் எங் களில் தலைதூக்கும் போது எங்கள் சுத்தமனசாட்சியின் புலன்களை நாங்கள் அடைத்துவிடுகின்றோம். இதனால், இருக்கும் சொற்ப பிரச்ச னைகளோடு, பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் இன்னும் அதிக பிரச்ச னைகளை சேர்த்துக் கொள்ளுவோம். அமரிக்கையிலும், நம்பிக்கை யிலும் எங்கள் பெலன் விளங்கும். தீமையான பேச்சுக்களை பேசு பவர்களுக்கு உங்கள் செவியை அடைத்துக் கொள்ளுங்கள். மாம்ச எண்ணங்கள் தலைதூக்கும் போது, தீர்மானங்களை எடுக்காமல், தேவனை நம்பி, அவருடைய தேவ சமுகத்திலே அமரிக்கையாக ஜெபத்திலே தரித்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது மாம்ச கிரியைகளுக்கு இடங்கொடுப்போம் பின்பு மனந்திரும்புவோம் என்று சிலர் எண்ணி, இச்சைகளை நிறைவேற்றுவதுண்டு. இப்படிப்பட் டவர்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்கின்றார்கள். 

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, பக்திவிருத்தியில்லாத, தீமையான பேச்சுக்களுக்கு என் செவியையும், என் வாயையும் அடைத்து, உம்மை நம்பி உம்முடைய பிரசன்னத்திலே ஆறுதல் அடையும்படி எனக்கு கற்றுத்தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:45