புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 24, 2018)

சோதனையாக தோன்றுபவைகள்...

1 தெச 5:22

பொல்லாங்காய்த் தோன் றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோப ங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படி ப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்ப தில்லையென்று முன்னே நான் சொன் னதுபோல இப்பொழுதும் உங்களு க்குச் சொல்லுகிறேன் என்று தேவன் தாமே அப்போஸ்தலராகிய பவுல் வழியாக எங்களுக்கு எச்சரிக்கின்றார். மேற்கூறப்பட்டவைகளில் ஒன்றை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கிறிஸ்துவை அறிந்த ஒருவன், மதுபான வெறியிலிருந்து விடுதலையாக்கப்பட்டிருந்தும், அதைக் குறித்த சோதனை, நினைவுகள், அவனை அழுத்துமாக இருந்தால். அவன் அதை ஊக்குவிக்கும், உறவினர், நண்பர்கள், இடங்கள், வேலைகள் யாவற்றிலுமிருந்து தன்னை அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்களையும் பொருட்களையும் எங்களைவிட்டு அகற்று வதல்ல, எங்கள் மனத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என சிலர் சொல்லிக் கொள்வார்கள். அது உண்மை யாவரும் அந்த நிலையை அடைய வேண்டும். அதை அடையும் வரைக்கும் நாங்கள் விலகி இருக்க வேண்டும். புதிதாய் பிறந்த ஒரு குழந்தை நடக்க ஆரம்பிக்கும்போது, நெருப்பைக் கண்டதும், எந்தவித சிந்தையும் இல்லாமல் ஓடிச்சென்று நெருப்பில் கை வைக்க முயற்ச்சி செய்யும். அக் குழந்தை வளர்ந்து அறிவடைந்து பெலன் கொள்ளும்வரை, அக்குழந்தை ஆபத்து தரக்கூடிய பொருட்கள் மற்றும் பொல்லாத மனிதர்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இளமைக்குரிய மோக பாவத்திற்குரிய இச்சைகளை விட்டு விலகி ஓடும்படி ஊழியராகிய தீமோத்தேயுவுக்கு பவல் அறிவுரை கூறினார். உங்களுடைய பரிசுத்த வாழ்வுக்கு  சோதனையான காரியங்களை நீங்கள் அறிந்திருக்கின்றீர் கள் உங்கள் சுத்த மனசாட்சியானது அதை உணர்த்தும் போது அவைகளை விட்டு உங்களை அப்புறப்படுத்துங்கள். அது மட்டுமல்ல சோதனையாக தோன்றும் காரியங்களை விட்டுவிலகியிருங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே,  என்னுடைய பெலவீனங்களிலே எனக்கு உதவி செய்யும் தூய ஆவியானவரின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கும்படியான இருதயத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:8-9