புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 23, 2018)

தேவன் நியமித்த ஒழுங்கு

யாக்கோபு 1:17

மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.


கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் நானூறு வரு~ம் அந்நிய தேசத்திலே உபத்திரவப்படுவார்கள். குறித்த ஆண்டுகள் நிறைவேறிய பின், இவர்களை ஒடுக்கிய ஜாதியை நான் நியா யந்தீர்ப்பேன்;, பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவா ர்கள். அவர்களை கானானிற்கு கொண்டுவருவேன், ஏனெனில் கானா னியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். இது தேவன் நியமித்த ஒழுங்கு. அந்த 400 வருடங்கள் நிறைவேறுமுன், மோசே, உபத்திரவப்படும் தன் ஜனங்களுக்கு நியாயம் செய்ய முயன்றான். அது தேவன்குறித்த நேரம் இல்லாதபடி யால், அவன் தன் உயிரைப் பாது காக்க எகிப்திலிருந்து மீதியானியரின் தேசத்திற்கு ஓடி 40 வருடங்கள் அங்கே இருந்தான். இதற்கொத்ததா கவே, எங்களுடைய கோபம், காலத்திற்கு முந்திய எங்களுடைய செயல்கள் தேவனுடைய ஒழுங்குகளை (தேவ நீதியை) நிறைவேற் றாது. தேவ ஒழுங்குகளை துணிகரமாக அசட்டை செய்து, தங்கள் அக்கிரமத்திலே வாழ முடிவெடித்த துன்மார்க்கர்கள் இந்த உலகிலே வாழ்கின்றார்கள். அவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதே தேவனு டைய விருப்பம். எனினும், அவர்களுடைய நாட்கள் குறிக்க ப்பட்டிருக்கின்றது. அவர்களுடைய அக்கிரமம் நிறைவேறும் போது, அழிவு சடிதியில் வரும். அதுவரைக்கும் எங்கள் கோபமும் சீற்றமும் ஒன்றையும் நடப்பிக்கமாட்டாது. சில வேளைகளிலே நாங்கள் செய்யும் நன்மைக்கு பதிலாக, மனிதர்கள் தீமை செய்து விடுகின்றார்கள். இந்த காரியத்தை தேவன்தாமே எங்கள் வாழ்க்கையில் அனுமதித்திருக்கி ன்றார். எனவே, தேவனுடைய நீதி எங்களிலும், எங்களுக்கு துரோகம் செய்தவர்களிலும் நிறைவேற நாங்கள் இடங்கொடுக்க வேண்டும். பிதாவாகிய தேவனின் சித்தப்படி இயேசு சிலுவையை ஏற்றார். அவர் உயிர்தெழுந்தபின்பும், தன்னை உபத்திரவப்படுத்தினவர்களை தண்டி க்க எண்ணாமல், பிதா நியமித்த ஒழுங்கையே பின்பற்றினார். கால த்திற்கு முந்திய எங்களுடைய கிரியைகளினால், வேண்டப்படாத உப த்திரவங்களை எங்கள் வாழ்வில் பெருகும். ஆதலால், கேட்கிறதற் குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவோம்.

ஜெபம்:

நீதியுள்ள தந்தையே, நீர் அனுமதிக்கும் பாத்திரத்தில் நான் பங்கெடுக்கும்படியாயும்,  முறுமுறுப்பில்லாமல்,  நீர் குறித்த நேரத்திற்கு காத்திருக்கும் பொறுமையை எனக்குத் தருவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 4:5