புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 21, 2018)

பிசாசின் தந்திரமான வலை

1 பேதுரு 5:9

விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே, சிலுவையினாலே,  பிசாசின் தலையை நசுக்கி, மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயங்கொ ண்டார். தலை நசுக்கப்பட்ட பிசாசானவன்,  அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவான்;. அதுவரைக்கும் தனக்கு கொஞ்சக் காலம் தான் இருக்கின்றது என அறிந்த அவன், கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். எனவே நாங்கள் தெளிந்த புத்தியுள்ள வர்களாக, விழித்திருக்க வேண்டும் என தேவனுடைய மனு~னாகிய பேதுரு அறிவுரை கூறியிருக்கின்றார்.  நாங்கள் பிசாசிற்கு சற்றும் பயப்படத் தேவையில்லை. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, பிசாசுக்கு எதிர்த்து நிற்கு ம்போது அவன் உங்களைவிட்டு ஓடி ப்போவான் என்று வேதம் கூறுகி ன்றது. தேவனுக்கு கீழ்ப்படிவது என் பது, அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதாகும்.  பிசாசின் தந்திரங்க ளோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ள வர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை எப்போதும் தரித்தவர்களாக இருக்க வேண்டும். என பரிசுத்த வேதாகம் கூறுகின்றது. ஆதியிலே, ஏதேன் தோட்ட த்திலே, பிசாசானவன் தந்திரமாக ஏவளை வஞ்சித்தான். அந்த இடத்திலே அவனை சர்ப்பம் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த பிசாசானவன், சிங்கத்தைப் போலவும், சர்ப்பத்தைப் போலவும் பிரதி யட்சமாக உங்களிடத்தில் “நான்தான் பிசாசு” என்று சொல்லிக் கொண்டு வரப்போவதில்லை. அவன் கிறிஸ்துவினுடையவர்களை  வஞ்சிக்கும்படி, இந்த உலகிலே தந்திரமுள்ள கண்ணிகள் வசீகர மான பேச்சுக்கள் வழியாக வஞ்சிக்கின்றான். கிறிஸ்துவை அறி யாதவர்கள் வழியாக ( உங்கள் நண்பர்கள், உறவினர், சக வேலைக் காரர் உட்பட) உங்கள் சிந்தையில், இனிமையாக தோன்றும் திட்டங்களை விதைத்துவிடுவான். எனவே அப்படிப்பட்ட தந்திரமான வலைக்குள் சிக்கிக் கொள்ளாதபடி விழிப்புள்ளவர்களாயிருங்கள்.  

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே,  பிசாசின் தந்திரங்களை கண்டு பயந்து நடுங்காதபடிக்கும், அவனுடைய வஞ்சனையை அறிந்து, உம்முடைய வார்த்தையினால் அவற்றை ஜெயிக்க என்னை வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாகோபு 4:7