புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2018)

தேவனுடைய நகரத்தார்

ஏசாயா 31:5

பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைக ளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.


தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட நகரத்தாராகிய எருசலேமின் குடி கள், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை மறந்து, மரக்கட்டை களாலும், வெள்ளி, பொன்,  உலோகங்களாலும் செய்யப்பட்ட, தேவ ர்கள் அல்லாத விக்கிரகங்களை நாடிச் சென்றார்கள். எனினும், அவர்கள் முற்றிலும் அழிந்து போகும்படிக்கு, மீதியானவர்கள் மன ந்திரும்புதலுக்காகவே சிட்சையை அனு மதித்தார். அதனாலே, சில அந்நிய ராஜ்யங்களை தன்னுடைய நகரத்தாரு க்கு எதிராக பெலக்கும்படி அனுமதி கொடுத்தார். அவற்றுள் ஒன்று, பண் டைய எகிப்து. ஆனால், தேவனு டைய ஜனங்கள் சகாயமடையும்படி பரிசுத்த தேவனைத் தேடாமல், எகிப்து க்குப்போய், அதன் படைப்;பலத்தில் நம்பி, தங்கள் பாவத்தோடே பாவத் தைக் கூட்டும்படி, கர்த்தருடைய ஆலோ சனையை தள்ளிவிட்டு, எகிப்தின் நிழ லிலே ஒதுங்கும்படி முரட்டாட்டம் செய்தார்கள். இதற்கு ஒத்ததாகவே, இன்று பலர் இயேசுவின் இரட்சிப்பை தள்ளிவிட்டு, எகிப்தைப் போல நாகரீகமாக தோன்றும் அந்நியகாரியங்களில் தங்கள் இருதயத்தை சாய்க்கின்றார்கள். இந்த உலக ஞானம், உலக ஐசுவரியம், மாம்ச பெலன் ஆறுதலடையும்படி ஒதுங்குகின்றார்கள். எகிப்தியர் தெய்வம் அல்ல, மனு~ர்தானே, அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது இந்த உலக செழிப்பை நம்பி சகாயம் செய்கிறவனும் இடறி, இந்த உலக செழிப்பை நாடி சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள். ஆனால் இவைகள் மத்தியிலும் கர்த்தரை நம்பியிருக்கின்ற தம்முடைய நகரத்தாரை அவர் ஆதரவாக இருந்து காத்துக் கொள்வார். இயேசுவை தங்கள் இரட்சகராக கொண்டவர்கள் யாவரையும் அவர் வழியாக, தம்முடைய பரிசுத்த நகரத்தாராய் மாற்றியிருக்கின்றார். தம்முடையவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு ஆதரவாக வந்து, அவர்களைக் காத்து,  அவர்கள் நித்திய வாழ்வடையும்படி பரலோகத்தில் கூட்டிச் சேர்ப்பார். 

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே,  எந்த நிலையிலும்,  எல்லாவற்றையும் கற்று அறிந்து கொண்டேன் என்ற மனநிலையை அடைந்துவிடாத படிக்கு,  எப்போதும் பலன் கொடுக்கும் படி, கேட்கும் உள்ளத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:16-19