புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 18, 2018)

வசனத்தை கேட்கும் செவிகள்

மத்தேயு 13:23

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசன த்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன்  தருவான் என்றார்.


இன்று உங்கள் பிரசங்கங்கள் நன்றாக இருந்தது ஆனால் நீங்கள் பிறரைக் குறித்து சொன்ன விடயத்தில் இந்த வார்த்தையை உபயோகித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என சபை யிலுள்ள ஒரு மனிதன், தேவ ஊழியரிடம் கூறினார். ஆலயத்திற்கு ஒழுங்காக சமுகமளிக்கும் அந்த மனிதன், ஞாயிறு தோறும் உன் னிப்பான தேவ செய்தியைக் கேட்டுக் கொள்வார். அதன் முடிவிலே, போத கரிடம் சென்று, பிரசங்கத்தைக் குறித்த தன்னுடைய ஆய்வுகளை கூறிக் கொண்டே வந்தார். ஒரு நாள் அந்த தேவ ஊழியர், அந்த மனிதனை நோக்கி: சகோதரனே, நீங்கள் தேவ செய்தியை ஆர்வமாக கேட்பதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் தேவ செய்தியின் கருப்பொ ருளை உண்மையாக உங்கள் இருத யத்தில் உணர்ந்து கொள்கின்றீர்களா? அல்லது தேவ செய்தியை விமர்சிப்ப தற்காக அதை கேட்கின்றீர்களா என்று கேட்டார். பிரியமானவர்களே, சற்று தரித்திருந்து சிந்தித்துப் பாருங்கள்! இந்த செய்தியைவிட அந்த செய்தி நல்லாக இருந்தது என்று பலர் இன்று கூறுகின்றார்கள். அப்படியானால் உங்கள் எதிர்பார்ப்பு என்ன? உங்கள் அபிலாi~களுக்கு ஏற்றபடி தேவ செய்திகள் அமைய வேண்டுமா? பிரசங்கங்களை குறித்து ஊழியர்களுடன் பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், தேவனுடைய செய்தியை சரியான நோக்கங்களுக்காவே நாங்கள் கேட்க வேண்டும். எங்கள் வாழ்க்கையில் பலன்பெறும்படியாகவும், விடுதலை அடையும்படியா கவும், தூய்மை அடையும்படியாகவும், தாழ்மை நிறைந்த, கீழ்படிவுள்ள இருதயத்தோடு கேட்க வேண்டும். பல ஆண்டுகளாக வேதத்தை படித்து வருவதால், இனி இவருக்கு போதனை தேவையில்லை என்ற நிலையை அடைந்து விடக்கூடாது.  தேவனுடைய வசனத்தை, போதி க்கின்றவர்களும், கேட்கின்றவர்களும, கிறிஸ்துவுக்குள், பிதாவாகிய தேவன் எதிர்பார்க்கும் பலனை கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே,  எந்த நிலையிலும்,  எல்லாவற்றையும் கற்று அறிந்து கொண்டேன் என்ற மனநிலையை அடைந்துவிடாத படிக்கு, எப்போதும் பலன் கொடுக்கும் படி, கேட்கும் உள்ளத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 28:23-29