புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 15, 2018)

கர்த்தரை நோக்கும் கண்கள்

சங்கீதம் 121:1

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.


தேவ ஆலயத்திற்கு ஆராதனைக்கு செல்லும் போது உங்கள் மனநிலை எப்படியாக இருக்கின்றது என எப்போதாவது சிந்தி த்திருக்கின்றீர்களா? எப்போதும் என் கண்முன்னே உம்மைத்தான் நிறு த்தி வைத்துள்ளேன் என்று தாவீது ராஜா தன் சங்கீதங்களிலே தேவனை நோக்கி பாடினார். அதே போல எங்கள் கண்முன்னும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு போதும் மற்றவர்களுடைய குறைகளை  எங்கள் கண்முன் வைத்து, அவைகளி னாலே எங்கள் மேன்மையாக நோக் கம் மாறிப்போய்விட இடங் கொடுக்க க்கூடாது. தேவனை முழு மனதுடனே ஆராதிப்பதை தடைசெய்வதே எங்கள் பொதுவான எதிரியாகிய சாத்தானின் நோக்கம். இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்று தீர்கதரிசியாக ஏசாயா முன்னுரைத்ததை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே சுட்டிக் காட்டினார். மேலும், ஒரு மனு~னுடைய பொக்கி~ம் எங்குள்ளதோ, அங்கே அவனுடைய இருதயமும் இருக்கும் என்றும், இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்றும் இயேசு கூறினார். எங்கள் இருதயம் தேவனுடைய மேன்மையான பரலோக பொக்கி~ங்களால் நிறைந்திருக்கும் போது, எங்கள் இருதயத்தில் இருந்து தேவனுடைய மேன்மைனயான விடயங்களே வெளிவரும். அங்குமிங்குமாக அலட்சியப்போக்கோடு எங்கள் கண்களையும், சிந்தையையும், பேச்சையும் விடுவோமாக இருந்தால், எங்கள் துதி ஆராதனை கருத்தற்றதாக இருக்கும். அதில் தேவன் பிரியப்படமாட்டார். அப்படி தேவன் எங்கள் துதிபலியை அங்கிகரிக்காவிட்டால், காயீனைப் போல எங்கள் இருதயம், மற்றவர்களக் குறித்த எரிச்சலின் ஆவியினால் நிறைந்திருக்கும். எனவே ஆலயத்திற்கு செல்லும் போது, எங்கள் மேன்மையான நோக்கத்தை உணர்ந்தவர்களாய், குறைகளை நோக்காமல், மனிதர்களை நோக்காமல், சம்பூரணராகிய பிதாவாகிய தேவனை எங்கள் கண்கள் முன்பாக வைத்திருப்போம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என் துதிபலி உம்முடைய சமுகத்தில் அங்கிகரிக்கப்படும்படியாக, கருத்தோடு உம்மை நோக்கி, உண்மையுள்ள இருதயத்தோடு உம்மை ஆராதிக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3