புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 14, 2018)

புதுபெலன் அடைந்திடுவோம்

ஏசாயா 40:33

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;


ஒரு ஸ்தாபனத்திலே புதிதாக வேலைக்கு சேர்ந்து கொள்ளும்போது, அந்த ஸ்தாபனத்தையும், அந்த ஸ்தாபனத்தின் முகாமையாளர்கள், இயக்குனர்களைப் பற்றி மிகவும் மேன்மையாக பேசிக் கொள்வார்கள். நாட்கள் கடந்து செல்லும்போது, அந்த மனநிலை மாற்றமடைகின்றது. ஏனெனில், அந்த மனிதன் எதிர்பார்த்த காரியங்கள், தான் விரும்பியபடி நடைபெறாதவிடத்து, அவன் மனதில் அதிருப்தி ஏற்பட்டுவிடுகின்றது. இப்படியாக தன்னை எதிர் நோக்கி வரும் சூழ்நிலைகளை, அவன் தன் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் கொள்கையின் அடிப்படையில் தீர்மா னங்களை எடுத்துக் கொள்கின்றான். இந்த ஸ்தாபனத்தைவிட்டால் இன்னு மொரு ஸ்தாபனத்திற்கு சென்றுவிட லாம் என தனக்குள்ளே சொல்லிக் கொள்வான். தங்கள் கல்வி, தகுதி, அனுபவம், செல்வாக்குகள் போன்றவற்றை மையமாக வைத்து, தங்கள் பெலன் ஒடுங்கும்வரை தீர்மானங்களை எடுத்துக் கொள் கின்றார்கள். வேதத்திலே காணும் பாத்திரமாக யோசேப்பு, தன் வாழ்க்கையிலே பல இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டிச் செல்ல வேண்டியவனாக இருந்தான். பிரச்சனைகள் ஒரு மனிதனை தேடிச் செல்வதுபோல, அவனை பல பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டது. ஆனால், அவனை எங்கு அனுப்பினாலும் அந்த இடத்திலே செய் வதை செம்மையாக செய்தான். தேவனுடைய நேரத்திற்கு காத்திருந் தான். பெரிதான உயர்வைப் பெற்றுக் கொண்டான். தேவனுடை நேரம் வரும்முன், கொப்புவிட்டு கொப்பு பாய்வதைப் போல, எங்கள் விருப்பப்படி தீர்மானங்களை எடுப்பதால், தேவன் எங்களுக்கென்று வைத்திருக்கும் ஆச்சரியமான, அற்புதமான வழிகளை நாங்களே அடைத்துப் போடுகின்றோம். எங்களுடைய தீர்மானங்கள் எங்கள் கொள்கையின் அடிப்படையில் தங்கியிருக்காமல், எங்கள் தேவனா கிய கர்த்தரில் தங்கி இருக்க வேண்டும். தேவன் எங்களுக்கென்று முன்குறித்தவைகளை அவர் நிறைவேற்றி முடிப்பார். எனவே, எங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் தேவனுடைய நேரத்திற்காக காத்தி ருக்க வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, எனக்கென்று நீர் முன்குறித்தவைகளை எவருமே தடுத்து நிறுத்தமுடியாது. எனவே, எப்போதும், எவ்விடத்திலும் உம்மை நம்பி, உம்முடைய நேரத்திற்கு காத்திருக்கும் பொறுமையை எனக்குத் தாரும்.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37: 1-5