புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 13, 2018)

உன்னதனாரின் ஆளுகை

கொலோசெயர் 1:16

சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.


எங்கள் வாழ்க்கையின் நிலையை கர்த்தர் அறிந்திருக்கின்றார். சில வேளைகளிலே, தேவனை தேடுகின்ற மனிதர்கள் கூட, தங்கள் பொருளாதார விவகாரங்களில் கர்த்தருடைய ஆளுகையை தள்ளி விட்;டு, தங்கள் சொந்த முயற்சிகளால் அற்ப இலாபங்களை அடைய எத்தனிக்கின்றார்கள். பரிசுத்த வேதாகமத்திலே, பழைய ஏற்பாட்டு புத்தகங்களிலே, தேசங்களின் பிரதியட்சமான ஆளுகையை குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. தேவனுக்கு பயந்து அவர் வழிகளில் நடந்த ராஜாக்கள் ஆளுகை செய்தார்கள் அதே வேளையில் தேசத்தின் அதிகா ரிகளினதும், ஆசாரியர்களினாலும், அதன் குடிகளினாலும் தேசம் தீட்டுப்ப ட்டதால், அந்நிய தேசத்து ஆளுகைகளை தேவன் அனுமதித்திருந்தார். கரு ப்பொருளானது, தேவன் அறியாமல் எங்களுடைய வாழ்க்கையிலே எதுவும் நடப்பதில்லை. அதனால், தேசத்திற்கு செலுத்தும் வரியிலிருந்து எப்படி தப் பித்துக் கொள்வது, தீர்வைகளை செலுத்தினால் என்னுடைய பொருளா தாரம் என்ன ஆவது என எண்ணி, அவற்றிலிருந்து தந்திரமாக தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதர்கள் தேடுகின்றார்கள். “ஆகையால் யாவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்த வேண்டியதோ அவனுக்குத் தீர் வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவ னுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம் பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.” என்று தேவ மனுஷனாகிய புவுல் ஆலோசனை கூறினார். சர்வவல்லமையுள்ள கர்த்தர் எங்கள் யாவரின் நிலையை அறிந்திருக்கின்றார். எனவே, அவரை நம்பி ஜீவனம் பண்ணுங்கள். உள்ளான மனிதனுக்குரிய தேவைகளை மட்டுமல்ல, இந்த உலகத்திலே நாங்கள் உயிர் வாழும்வரை எங்களுக்கு இன்னென்ன தேவை என்பதை உன்னதனார் அறிந்திருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக தேவனே, அற்ப ஆதாயங்களுக்காக என் சொந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லாமல், நீர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுகிறீர் என்ற சத்தியத்தை அறிந்து வாழ கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 32:27