புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 10, 2018)

பரிபூரணப்படுத்தும் இயேசு

ஏசாயா 35:7

வெட்டாந்தரை தண்ணீ ர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்க ளிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.


வறண்டதும் விடாய்த்ததுமான வாழ்க்கையை கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுக்கும்போது அவர் அதை செழிப்பாக மாற்றுவார். சில வேளை களிலே, மனிதர்களுடைய வாழ்க்கையானது, ஒன்றுக்கும் உபயோக மற்றதும், யாவரும் அருவருக்கும் பாழான கிணற்றைப்போலவும் மாறி விடுகின்றது. இனி நிம்மதி என்ற வார்த்தைக்கு வாழ்க்கையில் இடம் இல்லை என்ற நம்பிக்கையற்ற நிலை க்கு தள்ளப்படலாம். எப்படி மனிதர்கள் இப்படிப்பட்ட  பாழடைந்த நிலையை அடைகின்றார்கள்? திருடன் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொன்றுக் கும் வரான் என்றும், நானோ என்னை பின்பற்றுகின்றவர்களுக்கு ஜீவனை கொடுக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று இயேசு கூறியிருக்கின் றார். இயேசு இல்லாத வாழ்க்கையை திருடனாகிய பிசாசானவன் படிப்படி யாக பாழ்கடித்துப் போடுவான். போலி யான சுகபோகங்களினால் மனிதர்கள் இழுப்புண்டு போக செய்து விடுகின்றான். பல மனிதர்கள் இயேசுவின் இரட்சிப்பை அறியாமல், அல்லது ஏற்க மனதில்லாமல் இந்த பரிதா பமான நிலையை அடைகின்றார்கள். அதே நேரத்தில், இயேசுவை அறிந்து, அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய வழிகளில் வாழ்ந்து வருபவர்கள், இயேசுவாலே அருளப்பட்ட ஆசீர்வாதங்களால் மனமே ட்டிமை அடைந்து தங்களை அறியாமலே பின்வாங்கிப் போவதுமு ண்டு. எசேக்கிய ராஜா, தன்னைத் தாழ்த்தி முழு இருதயத்தோடும் தேவனை தேடியபோது, தேவன் தாமே, தேசத்தை ஆசீர்வதித்தார். ஆனால் பிற்பட்ட காலங்களிலே, அவன் மனமேட்டிமையடைந்தான். எனவே எந்நிலையிலும் மனமேட்டியை அடையாமல், எங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்புக் கொடுக்கும் போது, அவர் அதை பரிபூரணப்படுத்துவார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, எந்த நிலையிலும், மீட்பராகிய இயேசுவோடு வாழும் வாழ்க்கையைவிட்டு நான் அகன்று போகாதபடியும், பெருமை என்னை ஆண்டுகொள்ளாதபடிக்கும் என்னைக் காத்தரு ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:9