புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 09, 2018)

என் முழு இருதயத்தோடு.....

2 நாளாகமம் 31:21

அவன் தேவனுடைய ஆலயத்தின்வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப் பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்னசெய்யத் தொடங்கினானோ, அதை யெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்திபெற்றான்.


ஆகாஸ் என்னும் ராஜா, தன் ஆட்சிக்காலம் முழுவதும் கர்த்தருக்கு விரோதமாய் துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான். தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆல யத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி, அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட் டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட் டணத்திலும் மேடைகளை உண்டுப ண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான். தேசம் பாழாய் போயிற்று. இந்த நிலையிலே தான் எசேக்கியா ராஜா தன்னுடைய 25 வயதில் ராஜாவானான். அவன் கர் த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, பழுதுபார்த்து, தன்னையும், ஆலயத்தையும், ஆசாரியர்களையும், தேசத்தையும் ஜனங்களையும் கர்த்தர் கற்பித்த பிரகாரம் பரிசுத்தம் பண்ணி னான். கர்த்தருடைய பாஸ்காவை ஜன ங்கள் ஆசரிக்கும்படி, அவர்களை ஊக் குவித்து, அதை மிகவும் சிறப்பாக செய்வித்தான். தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ர வேலுடைய ராஜாவின் நாட்கள் முதற் கொண்டு  (சுமார் 250 ஆண்டு கள்) இப்படி எருசலேமில் நடந்ததில்லை. அப்படியே எருசலேமில் மகா சந்தோ~ம் உண்டாயிருந்தது. தேசம் ஆசீர்வதிக்கப்பட்டது. செல் வசெழிப்பினால் நிறைந்தது. ஏனெனில், எசேக்கியா ராஜா, தேவன் முன்னிலையிலே தன்னைத் தாழ்த்தி, செய்த எல்லாவற்றையும், தேவ பிரமாணங்களின்படி, முழு இருதயத்தோடு செய்தான். அதே போலவே, எங்கள் முழு இருதயத்தோடும் தேவனை தேடும் போது, பாழாய்போன இடமெல்லாம் பசுமையும் செழுமையுமாகும். 

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, பாழாய்போன வாழ்க்கையை மகா சந்தோஷமுள்ளதாக மாற்ற வல்லவர் நீர் ஒருவரே. நான் உமக்கென்று செய்வனவற்றை முழு இருதயத்தோடும் செய்ய, எனக்கு கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 4:29-31