புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2018)

ஆத்மீக உணவு

மாற்கு 4:20

வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். 


பண்டைய நாட்களிலே குறிப்பிட்ட பட்டணங்களைக் கைப்பற்றுவ தற்காக, எதிரிகள் அந்த பட்டணத்தின் முக்கிய பகுதிகளை முற்றுகை போடுவார்கள். அந்த தேசத்திற்கு, ஆகாரமும் ஆயுதமும் வரும் வழி களையும் துண்டித்து, அந்த தேசத்தார் பெலனற்று போகும்வரைக்கும் காத்திருப்பார்கள். அந்தப் பட்டணத்திலுள்ள பலவான்கள் யாவரும் பெலவீனமடைந்த பின்பு, இலகுவாக அந்த பட்டணத்தைத் தாக்கி, முற்றாக அழித்துவிடுவார்கள். சில வேளைக ளிலே, பட்டணத்தை அழிக்க முன்பு, உயிரைக் காத்துக் கொள்ள விரும்பு வோர், தங்களிடம் சரணடைந்து தங் களை சேவிக்கும்படியாக கூறுவார்கள். பரலோக யாத்திரிகளாகவும், தேவனு டைய பட்டணத்தாரகவும் தெரிந்து கொள்ளப்பட்ட எங்களது ஆத்மீக உணவு, தேவனுடைய வார்த்தையே. எங்களுடைய பெரிதான போராயுதம் ஜெபம். இவற்றை தேவனுடைய பிள்ளைகளின் வாழ்வில் இல்லாதபடி அகற்றி விடுவது, அல்லது தேவனுடைய பிள்ளைகள் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செய்வதே, எதிராளியாகிய பிசாசா னவனின் நோக்கம். தேவனுடைய வார்த்தையானது, வேத வாசிப்பு வழியாகவும், வேதப்படிப்புக்கள், தேவ செய்திகள் வழியாகவும் எங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதை நிறுத்திவிடுபவர்கள், நாளடைவில் ஜெபத்தையும் நிறுத்திவிடுவார்கள். இவை இரண்டும் அற்றுப்போகும்போது, எங்க ளுடைய இருதயம் தேவனுடைய அரணான பட்டணத்திற்குள் இருக் காது. அப்போது, பிசாசானவன் எங்கள் வாழ்க்கையை தன்னுடைய சித்தப்படி நடத்திச் சென்றுவிடுவான். அதன் முடிவு அழிவு! வாழ்வி ன்பலன் பெருகும்படிக்கு, தேவ வசனத்தை வாசியுங்கள், கேளுங்கள், சிந்தியுங்கள், அதன்படி செய்யுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிபவர்கள், அதன் படி ஜெபிக்கின்றார்கள், அதன்படி வாழ்க்கின்றார்கள். நானும் உம்முடைய வார்த்தைக்குப் கீழ்ப்படிந்து வாழ எனக்கு கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:10