புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2018)

உன்னதமானவரின் ஈவுகள்

1 நாளாகமம் 29:17

என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்;


தாவீது ராஜா கர்த்தருக்கென்று ஒரு ஆலயத்தை கட்ட விரும்பினான். கர்த்தர் அவனை நோக்கி: உன்னுடைய குமாரன் எனக்கென்று ஒரு ஆலயத்தை கட்டுவான் என்றார். தாவீது மனத்தாழ்மையோடு கர் த்தருடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, ஆலயம் கட்டுவதற்கு தேவையான பொருட்களை சேகரித்தான். மனப்பூர்வமாய்க் கொடு த்ததற்காக ஜனங்கள் சந்தோ~ப்பட் டார்கள்; உத்தம இருதயத்தோடே உற் சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார் கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோ ~ப்பட்டான். அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி இப்படி மனப்பூர்வ மாய்க் கொடுக்கும் திராணி உண்டா வதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம் மால் உண்டானது. உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.  உம க்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதே சிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது நிலைத் திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை என்று ஜெபம் செய்தான். பிரி யமனாவர்களே, தாவீது தேசத்தின் ராஜாவாக இருந்த போதும், தன் அந்தஸ்தையோ, தன்னிடம் இருக்கும் செல்வத்தையோ பொருட்படு த்தாமல் தன்னைத் தாழ்த்தினார். நீங்கள் கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தால் அது தேவனால் அருளப்பட்ட சிலாக்கியம் என்பதை அறி ந்து கொள்ளுங்கள். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமி ல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். இந்த உலக செல்வங்களை உங்கள் பெற்றோரிடமிருந்து சுதந்தரித்திருக்கலாம் அல்லது நீங்கள் உழைத்திருக்கலாம், ஆனால் அதை தேவனே உண்டு பண்ணினார். எனவே, வறியவர்களுக்கு உதவும் போதும், நான் கொடுக்கின்றேன் என்ற மனநிலை இல்லாமல், தேவரீர், வறியவர்களுக்கு உதவி செய்யும்படியாக, நீர் எனக்குத் அருளிய வளங்களுக்கும், மனதிற்கும் நன்றி என்று கூற வேண்டும்.

ஜெபம்:

கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே, என்னிடத்தில் உள்ளதெ ல்லாம் உம்முடையது. உம்மைப்போல நானும் இரக்கமுள்ளவனாக (ளாக),  தாராளமாய் கொடுக்கும்படியான உத்தம இருதயத்தை எனக்குத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோத்தேயு 6:17-18