புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 04, 2018)

தகர்க்காத மேடைகள்

யாத்திராகமம் 23:13

அந்நிய  தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.


கர்த்தராகிய தேவனுக்கு பிரியமான தாவீது ராஜா, அன்று இருந்த இஸ்ரவேல் ராஜ்யத்திற்கும், அவர் பின் வந்த ராஜாக்களுக்கும், இன்று எங்களுக்கும் தேவனுடைய அளவுகோலாக மாறினார் அதா வது, மற்றய ராஜாக்களை பற்றி பேசும்போது, “தாவீதைப் போல எனக்கு பிரியமானதைச் செய்யவில்லை அல்லது தாவீதைப் போல எனக்கு பிரியமாக இருந்தான்” என்று கூறப்பட்டுவருகின்றது. தாவீதுக்கு பின் வந்த முதலாம் யெரோபெயாம்  ராஜா வும் பழமொழிச் சொல் ஆகினான். ஆனால் இந்த யெரோபெயாம் தீமை யான பழமொழிச் சொல்லாகினான். காரணம் என்ன? தாவீது ராஜா உய ர்விலும் தாழ்விலும் ஜீவனுள்ள தேவ னையே சார்ந்திருந்தார். அந்நிய தேவர் களின் நாமங்களை கூட, உச்ச ரிக்க வும்மாட்டேன் என திட்டமாக கூறினார். ஆனால் யெரோபேயாம்  ஜனங்கள் கர்த்தருக்கு பலி செலுத்தாதபடி, கர்த்தருடைய ஆசாரியர்களை துரத்திவிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்று க்குட்டிகளுக்கென்றும் ஈனமானவர்களை ஆசாரியர்களாக ஏற்படுத்தி னான். விக்கிரக ஆராதனையும், அந்நிய தேவர்களை பின்பற்றுதலும் புற்றுநோய் (கான்சர்) வியாதிக்குச் சமானம். மனித உடலிலே இருக் கும் பல கோடிக்கணக்கான கலங்களில் ஒரு கலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் போதும். அது கண்களுக்கு தெரியாமல் பரவ ஆர ம்பிக்கும். யெரோபேயாமுக்கு பின் வந்த பல ராஜாக்களும், கர் த்தருக்கு பிரியமாக இருக்க சில முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் அந்நிய தேவர்களுக்கு பலி செலுத்தும் மேடைகளை தகர்த்துப் போடாமல் விட்டுவைத்தார்கள். அதனால் அவர்கள் தங்களைத் தாங்களே கண்ணியிலே அகப்படுத்திக் கொண்டார்கள். இன்று உங் களுடைய இருதயத்திலே உடைக்கப்படாத மேடைகளை தகர்த்துப் போடுங்கள். விக்கிரகங்கள்; குறித்த விடயத்திலே மிகவும் எச்சரிக் கையாக இருங்கள். இந்த விடயத்தில் சமரசம் பேசுவீர்களாக இருந்தால், அது கான்சர் நோயைப் போல, படிப்படியாக, உங்கள் உள்ளான மனிதனை முற்றிலும் கெடுத்துவிடும்.

ஜெபம்:

பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, என் இருதயத்திலே உமக்கு மட்டும் இடம் கொடுக்கவும், அதை குறித்து எந்த சமரப் பேச்சும் பேசாதபடி, முழுமையாக உம்மை பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 115:1-18