புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 03, 2018)

தர்க்கம் பண்ணாதிருங்கள்

யோபு 21:22

உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?


சவுல் என்னும் ராஜா, அமலேக்கியருடைய யுத்தத்திற்கு செல்லும் போது, அங்குள்ள யாவற்றையும் அழித்துப்போடும்படியாய்,  கர்த்தரிடமிருந்து கட்டளையை பெற்றான். இந்த வார்த்தைகள் கிரகிப்பதற்கு கடினமானவைகள். இதிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்ளகூடிய தேவனுடைய பண்பு என்ன?  பூமியும் அதன் நிறைவும், அதன் குடிகளும் கர்த்தருடையவைகள். தேவன்தாமே, மனிதர்களுக்கு, தங்களே தங்கள் வழிகளை தெரிந்து கொள்ளும்படியான சுயாதீனத்தை கொடுத்து, அழிவை தெரி ந்து கொள்ளாமல், வாழ்வை தெரிந்து கொள்ளும்படி ஆலோசனை கூறுகின்றார்.  தேவனாகிய கர்த்தர், மனதுருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், கிருபையுமுள்ளவர். ஒருவனும் பாவத்தில் அழிந்து போவது அவருடைய சித்தமல்ல. ஆனால் அவருடைய நற்பண் புகளை காலாகாலமாக அற்பமாக எண்ணி அசட்டை பண்ணுகின்ற வர்களுக்கு ஒரு நாள் நீதியான  நியாயத்தீர்ப்பு உண்டு. ஒருவரும் தப்பிக் கொள்ளமுடியாது. அது போலவே அமேலேக்கியரின் அக்கிர மத்தின் காலம் நிறைவேறிய போது, தேவன் இந்த கட்டளையைக் கொடுத்தார். ஆனால் சவுல் அங்கு சென்ற போது, கொழுமையான ஆடுகளை கண்டு இச்சித்து, சாபத்தீடான அவைகளை காப்பாற்றி கொண்டு வந்தான். இதனால் அவன் தனக்கும், தனக்கு பின்வரும் சந்ததிக்கும் கர்த்தரால் வைக்கப்பட்டிருந்த மேன்மையை இழந்து போனான். தேவன் அன்பு உள்ளவர். அவரைவிட அதிகமாக எவரும் எவரையும் நேசிக்க முடியாது. எனவே, தேவனுக்கு அன்பையும் இரக்கத்தையும் கற்றுக்கொடுக்க முற்படாதிருங்கள். அவருக்கு ஞானத்தை புகட்ட துணிகரம் கொள்ளாதிருங்கள். தேவன், விலக்கினவைகளை (உறவோ, பொருளோ) அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதிருங்கள். நாங்கள் தேவனுடைய சமுகத்திலே யாவருக்காகவும் பரிந்து பேசும் சிலா க்கியம் உண்டு. எனவே, உங்கள் ஜீவனுக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, சர்வ வல்லவருடைய கட்டளைகளை அசட்டை செய்யாதிருப்பீர்களாக. மகா பரிசுத்தரின் தீர்மானங்களை குறித்து தர்க்கம் செய்யாதிருப்பீர்களாக

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உன்னதத்தில் வாழும் உம்முடைய கட்டளைகளையும், நீர் எடுக்கும் தீர்மானங்களையும் குறித்து தர்க்கம் செய்யாதபடி என் இருதயத்தைக் காத்துக் கொள்ள கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 7:1-26

Category Tags: