புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 30, 2018)

காரியத்தின் கருப்பொருள்

மத்தேயு 11:29

நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாயிருக்கி றேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொ ண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.


நான் வளரந்து என்னுடைய அப்பாவைப் போல வர வேண்டும் என்று ஒரு சிறு பையன் கூறினான்.  சரீரத்திலே மிகவும் பெலசாலியான தந்தை, பாரம் கூடிய பொருட்களை இலகுவாக தூக்கிக் கொண்டு போவதை, அவனுடை மகன் கண்டதாலேயே அப்படியாகக் கூறினான். ஆனால் அந்த தகப்பனாரின் சரீர பெலத்தைவிட அவர் அதிக சாந்த குணமுள்ளவர் என்பதைபற்றிய மேன் மையை அவனுடைய மகன் இன்னும் அறியவில்லை. எங்களில் பலரும், நான் இயேசுவைப் போல மாற வேண்டும் என்று சொல்லுவதுண்டு. அந்த கூற்றின் ஆழம் என்ன? இயேசு இந்த உலகத்திலே இருந்தபோது, உலக தோற்றமுதல் நடைபெறாத பெரிதான அற்புதங்களைச் செய்தார். சதுசேயர், பரிசேயர், வேத வல்லுனர் களின் பிரிவை சேர்ந்த பலர், தங்க ளைத் தாங்களே நீதிமான்களாக உயர்த்திய போது, அவர்களை கடுமையாகக் கண்டித்தார். இவைகளை இயேசு செய்தார் எனவே நானும் அவரைபோல செய்வேன் என்று பலர் வாஞ்சிக்கின்றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் மையம் பிதாவின் சித்தம் செய்வது மட்டுமே என்பதை உணராதிருக்கின்றார்கள். இயேசு இந்த உலகத்திலே வெளிப்படுவதற்கு, அற்பமாய் எண்ணப்பட்ட கிராமத்தையும், எளிமையான வாழ்க்கை வாழும் மனிதர்களையும் தெரிந்து கொண்டார். பாவக்கட்டிலே வாழ்பவர்களை கண்டு மனதுரு கினார். தன்னை மரண பரியந்தம் தாழ்த்தி, மனித குலத்தின் பாவங் களை சுமந்து, தம்மை அவமானத்திற்கும், பாடுகளுக்கும் பிதாவின் சித்தப்படி ஒப்புக் கொடுத்தார். எனவே எங்கள் வாழ்க்கையிலும் நாங் கள் இயேசுவைப் போல மனத்தாழ்மையுடனும் சாந்தத்துடனும் பிதாவின் சித்தம் எங்களில் நிறைவேறும்படி எங்களை தேவ ஆவியா னவருடைய வழிநடத்துதலுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, என்னுடைய விருப்பத்தின்படி என் வாழ்வை வாழாமல், இயேசுவைப்போல மனத் தாழ்மையுடனும் சாந்தத்துடனும் உம்முடைய சித்ததிற்கு ஒப்புக்கொடுக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 5:17

Category Tags: