புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2018)

நாட்களை எண்ணும் அறிவு

பிரசங்கி 3:11

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;.


இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தேசத்திலே பலுகிப் பெருகுகின்றார்கள் என்று அறிந்த எகிப்தியர்கள், இஸ்ரவேலரை அடிமைத்தனத்திற்குட்ப டுத்தி, அவர்களின் ஆண் குழந்தைகளை கொன்று போடும்படி, எகிப்திய ராஜாவின் கட்டளையை பெற்றுக் கொண்டான். ஆனால் மோசே என்னும் குழந்தை காப்பாற்றப்பட்டு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் குமாரத்தியினால் வளர்க் கப்பட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் 400 வருடங்கள் எகிப்திலே அடிமைகளாக இருப்பார்கள் என்று தேவன் அவர்க ளுடைய முற்பிதாவாகிய ஆபிரகாமி ற்கு கூறியிருந்தார். அந்த வருடங்கள் நிறைவேற இன்னும் சில காலம் இருந்தது. மோசே 40 வயதானபோது, தன்னுடைய பெலத்தின்படி, தன் ஜனங்களுக்கு உதவ முற்பட்டபோது, அது அவனுக்கு பாதகமாக வந்ததால், பார்வோனிடத்திலிருந்து தப்பி ஓடி, மீதியானியரின் தேசத்திலே குடியிருந்தான். அங்கு திருமணமாகி, தன் மாமனாரின் ஆடுகளை மேய்த்து வந்தான். அரண்மனையிலே வளர்ந்த இவனுக்கு, தன்னிடத்தில் எந்த மேன்மையும் இனி இல்லை என்ற நிலையை அடையும்வரை, அங்கே ஆடுகளை மேய்த்தான். அவனுடைய 80வது வயதில், இஸ்ரவேல் ஜனங்களை மீட்க்கும்படி க்கு தேவன் அவனை அழைத்தபோது, இந்த அழைப்புக்கு நான் எம்மாத்திரம் வேறு யாரையும் அனுப்பும் என்றான். ஆனால் தேவ னோ, நம்பிக்கை இழந்து போன மோசேயை வைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு இரட்சிப்பை கொடுத்தார். இந்தக் காரியம், தேவனால வந்தது என்று யாவரும் அறியும்படிக்கும், மோசேயும் அறியும்படிக் கும், தன்னால் இதைச் செய்ய முடியாது என்று தன்னை தாழ்த்திய மோசேயை, தேவன்தாமே பயன்படுத்தினார். எனவே உங்கள் சொந்த பெலத்தில் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணாமல், தேவன் முன்னி லையிலே உங்களை தாழ்த்துங்கள். அவர் முன்குறித்த நேரத்திற்காக காத்திருங்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, என் பெலத்தில் சாயாமல், உம்முடைய நேரத்திற்கு காத்திருக்கும்படியாக, நாட்களை எண்ணும் அறிவை எனக்கு தந்து என்னை வழிநடத்திச் செல்லும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:27-31