புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 25, 2018)

சிந்தையும் செய்கையும்

2 கொரிந்தியர் 13:11

கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர்பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் கார ணராகிய தேவன் உங்க ளோடேகூட இருப்பார்.


இந்த உலகிலுள்ளவர்கள் தங்களுக்கென்று நண்பர்களையும், புதிய உறவுகளையும் தேடும் போது, சமுக அந்தஸ்து, கல்வித் தராதரம், பொருளாதார அந்தஸ்து, வெளித்தோற்றம் என்று பல காரணிகளை அலசி ஆராய்கின்றார்கள். ஆனால் தேவனானவர், அரசன், குடிமகன், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் தாழ்மையுள்ள இரு தயத்தைத் தேடுகின்றார். தேவனுடைய வழிகளிலே உத்தமமாய் நடந்து, தேவன் முன்குறித்த அவருடைய சித்தத்தை, நீதியை நடப்பித்து, மனதார தேவனு டைய சத்தியத்தை பேசுகின்றவனின் உள்ளத்திலே தேவன் வாசமாய் இருப் பார். ஒரு சாதாரண வீட்டை எடுத்துக் கொண்டால், அந்த வீட்டில் வாழும் மனிதன் அந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கின்றான் என்று காண்பவர் கள் யாவும் அறிகின்றார்கள். அந்த எண்ணம் அவன் மனதிலே தோன்றி பின் செய்கையிலே காண்பிக்கப்படுகி ன்றது. அதன் பலனை அந்த வீட்டிற்கு போகின்ற யாவரும் காண்கின்றார்கள். ஒரு வீட்டிலே சமாதானம் நிலவுகின்றது என்றால், அந்த எண்ணம் அங்கு வாழ்பவர்களின் மனதிலே தோன்றி, பின் செய்கையினாலே உறுதிப்படுத்தப்பட்டு, பின்பு அதன் பலனை அதாவது, சமாதானத்தை அனுபவிக்கின்றார்கள். தேவனாகிய கர்த்தரே அன்புக்கும் சமாதா னத்துக்கும் காரணராக இருக்கின்றார். அவர் எங்கள் உள்ளத்தில் தங்க வேண்டுமென்றால், முதலாவதாக, அந்த சிந்தையை நாங்கள் தரிக்க வேண்டும். பின்பு, அந்த சிந்தையை செயலிலே காண்பிக்க வேண்டும். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் எங்களோடு இருக்கி ன்றார் என்பதை உறுதி செய்து கொள்வோம்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, நீர் தங்கும் ஸ்தானமாக என் உள்ளம் மாறும்படிக்கு, என்னுடைய சிந்தையை மாற்றும். தூய சிந்தையை தரித்து, அதை செயல்ப்படுத்த எனக்கு உதவிசெய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8