புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 17, 2018)

தினந்தோறும் தியானியுங்கள்

நீதிமொழிகள் 21:30

கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.


எங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களின்படி துரிதமாக தீர்மான ங்களை எடுத்துக் கொள்ளாமல், பொறுமையை கடைப்பிடித்து தரித்தி ருந்து, தீர்மானங்களை எடுப்பது நல்லது. தரித்திருக்கும் நாட்களிலே, வேதத்தை வாசித்து, ஜெபித்து, நல்ல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். சலொமோன் ராஜா மரித்தபின், அவனுடைய மகன், ரெகொபெயாம் ராஜா வானான். அப்பொழுது, ஜனங்கள், தங்களுடைய க~;டங்களை அவனுக்கு தெரிவித்து, உம் தகப்பன் எங் களை கடுமையாக நடத்தினார், எங் கள் சுமையை இலகுவாக்கும் என்று வேண்டினார்கள். ரெகொபெயாம் அவ ர்களிடன் மூன்று நாள் தவணை கேட்டு, இந்தக் காரியத்தை குறித்து ஆலோச னையை நாடினான். அவனிடம் இருந்த வயதான மூப்பர்கள், ஜன ங்களின் வேண்டுதலை கேட்டு, அவர்களின் வாழ்க்கையை இலகுவா க்கும்படி கூறினார்கள். அவனோடிருந்த வாலிபர்களோ, அவர்களு டைய சுமையை இன்னும் அதிகரித்து, அவர்களோடு மிகவும் கடின மாக இருக்கும்படி கூறினார்கள். ரெகொபெயாம், வாலிபர்களின் பக் கம் சாய்ந்து, ஜனங்களை பகைத்தான். இதனால் ராஜ்யத்தின் பன்னிர ண்டில் பத்துப் பங்கை இழந்து போனான். இதனால் வடராஜ்யம், தென் ராஜ்யம் என, ஆட்சி பிரிந்து போயிற்று. ரெகோபெயாம், பதில ளிப்பதற்கு மூன்று நாள் தவணை கேட்டு, ஆலோசனையை நாடியது நல்ல தீர்மானம். அதுபோல நாங்களும் தரித்திருப்பது நல்லது, ஆனால் எவருடைய ஆலோசனை நாம் பின்பற்றப் போகின்றோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேவனுடைய ஆலோசனைகள் வேத வார்த்தைகளோடு ஒத்திருக்கும். எனவே, நாங்கள் வேத வார்த்தைகளை தினந்தோறும் வாசித்து தியானம் செய்ய வேண்டும். அப்போது சரியான தீர்மானங்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

ஜெபம்:

மகிமை நிறைந்த தேவனே, இரவுல் பகலும் உம்முடைய வார்த்தைகளில் தியானமாயிருந்து, அவைகளை என் வாழ்க்கையில் நான் கைகொள்ளும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6