புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 14, 2018)

வஞ்சிக்கப்படாதிருங்கள்!

2 கொரிந்தியர் 11:3

ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திரு க்கிறேன்.


ஒரு கிராமத்திலே உள்ள ஜனங்கள், மற்றய கிராமத்திலுள்ள தங்கள் எதிரிகளை சிதறடித்துவிடுவோம் என்று ஒன்றுபட்டிருந்தார்கள். எப்போது எதிரிகள் வருவார்கள், நாங்கள் விழிப்புடன் ஆயத்தமாக இருப்போம் என்று எதிரிகளின் பிரதியட்சமான வருகையை எதிர்பா ர்த்திருந்தார்கள். பல நாட்கள் கடந்து சென்ற பின், இந்த கிராமத்திலுள்ள சிலர் குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அவற்றை பொருட்படுத்தாமல், எதிரிக்காக மனிதர்கள் காத் திருந்தார்கள். மாதங்கள் கடந்து செல் லச் செல்ல, இவர்கள் மத்தியில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் பிரிவினையாக மாறி, ஜனங்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து விட்டார்கள். ஒரு குழுவை சேர்ந் தவர்கள் முன்னெடுக்கும் எந்த ஆக்க ங்களையும், மற்றய குழுவைச் சேர்ந்த வர்கள் குழப்பிவிடும் நிலைக்கு பிரிவினை கசப்பாகிவிட்டது. அந்தக் கிரா மத்தாரே அவர்களின் எதிரிகளாக மாறிவிட்டார்கள். இது தங்கள் எதிரியின் வஞ்சனையான சூழ்ச்சி என்பதை அந்த கிராமத்திலுள்ள சிரேஷ்ட மூப்பனார் அவர்களுக்குச் சுட்டிக் காண்பித்தபோது, அவர் மூலமாய் யாவரின் கண்களும் திறக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட குடும்ப, சமுக, சபை வாழ்க்கையில் உங்கள் எதிரி பிரதியட்சமாய், “நான்தான் சாத்தான்” என்று வெளிவருவான் என்று எதிர்பார்த்து, நாளாந்தம் நடக்கும் சிறிய விடயங்களை அசட்டை செய்து, சாத்தானுடைய வஞ்சகமான வலைக்குள் விழாதபடி எச்சரிக்கையாயிக்கும்படி இயேசுவின் சீஷனாகிய பவுல் புத்தி சொல்கின்றார். விழிப்புள்ளவர்களாயிருங்கள், ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஜெபத்திலே தரித்திருங்கள்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, எங்கள் நாளாந்த வாழ்க்கை யிலே,சாத்தானின் தந்திரங்களை நிதானித்தறியத்தக்கதாக, உம்முடைய தூய ஆவியானவரின் வழிநடத்துதலைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:7