புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2018)

கர்த்தரை நோக்கிப் பாருங்கள்

சங்கீதம் 40:1

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.


தாவீது, சவுல் ராஜாவுக்கு தப்பியோடி, சிக்லாக் என்னும் இடத்தில் இருந்தான். தாவீதும், அவனோடு இருந்த புருஷர்களும் இல்லாத சமயத்திலே, அமலேக்கியர் சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்க ளையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொ ண்டு, தங்கள் வழியே போய்விட்டார் கள்.  தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லா மல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.  தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேச மானதினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். இதற்கொத்ததாக, என்ன செய்வதென்று தெரியாத சூழ்நிலைகள் எங்களுக்கும் ஏற்படுவதுண்டு.  அந்த நேரங்களிலே, சில மனிதர்கள் தங்கள் உணர்வுகளின்படி செயலாற்றி, இன்னும் அநேக துன்பங்களுக்குட்பட்டு விடுகின்றார்கள். ஆனால் தாவீது, தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.  அவன் கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார். நாங்களும், எங்கள் இக் கட்டான சூழ்நிலைகளில், பதற்றமடைந்து, வீண் வார்த்தைப் பிர யோகங்கள் செய்யாமலும், எங்கள் உள்ளத்தில் தோன்றியபடி செய ற்படாமலும், தாவீதைப் போல தேவனுடைய சமுகத்திலே ஜெபத் திலே தரித்திருந்து, தேவனுடைய வழிநடத்துதலுக்கு காத்திருக்க வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே,  நீர் அறியாமல் என் வாழ்வில் ஏதும் நடைபெறப்போவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும், உம்முடைய வழிநடத்துதலை பெற்றுக் கொள்ளும்படி காத்திருக்க பொறுமையைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 123:1-4