புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 11, 2018)

தேவன் பரிசுத்தர்

2 கொரிந்தியர் 7:1

இப்படிப்பட்ட வாக்குத்தத் தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.


கர்த்தர் என்னை தம்முடைய சித்தம் செய்வதற்காக பிரத்தியேகமான அழைப்பை தந்திருக்கின்றார், பிரதியட்சமாக அபிN~கம் பண்ணி யிருக்கின்றார் அதனால் நான் தேவனுடைய அடிப்படை நியம ங்களுக்கு விதிவிலக்கானவன் என்று யாரும் கூறமுடியாது. எடுத்துக் காட்டாக, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: அந்நிய விக்கிரக ங்களை தங்கள் தேவர்களாக கொண் டவர்களுடன் (புறஜாதியாருடன்) சம்ப ந்தம் கலக்க வேண்டாம். அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று முன்கூட் டியே சொல்லியிருந்தார்;. சாலோமோன் என்னும் தாவீதின் குமாரனை, கர்த்த ராகிய தேவன் தாமே, பிரத்தியேக மாக அழைத்து, பிரதியட்சமாக அபிஷேகித்தார். ஆனால், அவனோ அந்நிய ஸ்திரிகளை தன் மனைவிகளாக்கிக் கொண்டதால், அவன் வயது சென்ற காலத்தில், அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்க ளைப் பின்பற்றும்படி சாயப்பண்ணி னார்கள்;. இதனால் சலோமோன் ராஜா பாவம் செய்து கர்த்தரைவிட்டு தூரம் சென்றுவிட்டான். நாங்களும் பிரத்தியேகமான அழைப்பைப் பெற்றவர்கள். இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத அருமையான பரிசுத்த இரத் தத்தினால் பாவம் நீங்க சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்த வாழ்க்கை வாழு ம்படியாக பிரித்தெடுக்கப்பட்டிருக்கின்றோம். பிதாவிடத்தில் சேரும்ப டியாக ஜீவனுள்ள புதிய  வழியை உண்டு பண்ணினார்.  இந்த அரு மையான அழைப்பையும், தேவன் தந்த சுயாதீனத்தையும், கர்த்தரு டைய வார்த்தையின்படி பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பரலோக தந்தையே,  உம்மை ஆராதிக்கும்படி நீர் எனக்குத் தந்த சுயாதீனத்தை நான் அற்பமாக எண்ணி,  என்னுடைய சுயவிருப்பங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தாமல் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:16