புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 09, 2018)

முன்குறிக்கப்பட்டவைகள்

சங்கீதம் 89:34

என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடு கள் விளம்பினதை மாற் றாமலும் இருப்பேன்.


தேவனாகிய கர்த்தர், எங்களுக்கு என்று முன்குறித்த எந்த காரிய த்தையும் எவராலும் தடை செய்ய முடியாது. இவைகளில், தேவன் தாமே,  பிரத்தியேகமாக தனி மனிதனுக்கோ, குடும்பத்திற்கோ, சபை ஐக்கியங்களுக்கோ, தேசத்திற்கோ முன்குறித்த காரியங்களாக இருக் கலாம் அல்லது தேவனுடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டு அவர் வழி நடக்கும் பிள்ளைகள் யாவ ருக்கும் உரித்தான நன்மையாக இருக் கலாம். எவை எப்படியாக இருந்தா லும், வானமும் பூமியும் ஒழிந்து போனா லும் அவர் உரைத்த வாக்குகள் மாறா தவைகள். சில வேளைகளிலே எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையை ஆராய் ந்து பார்க்கும் போது, எங்களை ஆளுகின்றவர்கள் பலத்திருக்கின்றார்கள், எங்கள் எதிரிகள் வல் லரசுகளைப் போல பயங்கரமானவர்கள், ஆனால் நாங்களோ எளி மையும் சிறுமையுமானவர்கள் போல எண்ணத் தோன்றலாம். பிரிய மானவர்களே, முற்காலங்களிலே, தேவனுடைய தீர்க்கதரிசிகள், நடக்க இருக்கும் சம்பவங்களை முன்னுரைத்தபோது, ராஜாக்கள், அதிகாரி கள், ஐசுவரியவான்கள், உலகிலே கல்விமான்கள் என்று அழைக்கப்ப ட்டவர்கள், அந்த தேவனுடைய மனு~ர்களை நகைத்தார்கள், அடித் தார்கள், சிறையில் வைத்தார்கள், பலரை கொலை செய்தார்கள். ஆனாலும், தம்முடையவர்கள் வழியாக தேவன் உரைத்ததை நிறை வேற்றினார். இது முடிந்த கதை அல்ல, இன்றும் தேவன் தான் உரை த்தவைகளை நிறைவேற்றுகின்றார். இன்னும் நிறைவேற்றி முடிப்பார். எனவே திடன் கொள்ளுங்கள், வாக்குத்தத்தங்களை பிடித்துக் கொண்டு, விசுவாசத்தோடு அவைகளை அறிக்கையிடுங்கள். பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல மனம்மாற அவர் ஒரு மனுபுத் திரனும் அல்ல. குறித்த காலத்திலே, எல்லாவற்றையும் செம்மையாய் செய்து முடிப்பார்.

ஜெபம்:

வாக்குமாறாத தேவனே,  நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன். உம்முடைய வாக்குத்தத்தங்களை இறுகப்பற்றி கொள்ளும் உணர்வுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 23:14