புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2018)

நித்திய வாழ்வு தரும் வசனம்

கொலோசெயர் 3:16

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரண மாக வாசமாயிருப்பதாக;.


ஒரு சமயம் இயேசு கப்பர்நகூம் என்னும் ஊருக்கு வந்தபோது, அவர் இருந்த  வீட்டின் முன் ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் வாசலு க்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு இயேசு வசனத்தைப் போதித்தார். அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;. ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச்; சமீ பமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத்திற ப்பாக்கி, திமிர் வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர் வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகி றேன் என்றார். இந்த சம்பவத்தை கண்ட, வேத வல்லுனர்களில் சிலர், பாவங்களை மன்னிக்க இவர் யார் என்று குழப்பமடைந்தார்கள். இந்த சம்பவத்தைக் குறித்து ஆராய்ந்து பார்க்கும் போது, நோயாளியை கொண்டு வந்தவர்களின் விசுவாசத்தையும், வேத வல்லுனர்களின் அறியாமையையும், இயேசு செய்த அற்புதத்தையும் பேசிக் கொள் வோம். இவை யாவற்றிலும் நன்மையான படிப்பினைகள் உண்டு. ஆனால் இவை யாவற்றிலும் மேன்மையானது, இயேசு ஜனங்களை கண்ட போது “அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்”. எங்கள் வாழ்க்கையிலும், நாங்கள் கர்த்தருடைய ஜீவ வசனங்களை அறிந்து அவற்றை கைக்கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாயிருக்க வேண்டும். அந்த வசனங்களிலே முடிவில்லா வாழ்வு உண்டு. அந்த வசனங்களில், எங்களை குறித்ததான தேவனுடைய அநாதி தீர்;மானத்தின் மகிமையான இரகசியம் அடங்கி உள்ளது. எனவே, வேத வசனத்தை ஆர்வத்தோடு கற்றுக் கொள்ளுங்கள். 

ஜெபம்:

பரலோக பிதாவேஇ வேதத்திலுள்ள இரகசியங்களின் மேன் மையை உணர்ந்துஇ அந்த வசனங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள உம்முடைய பரிசுத்த ஆவியானவர் வழியாக என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:22