புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2018)

நன்மை உண்டாகும்படிக்கு...

எபேசியர் 6:2-3

உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,  உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்த த்தமுள்ள முதலாங் கற் பனையாயிருக்கிறது.


ஒரு சமயம், சமுதாய அந்தஸ்து பெற்ற பரிசேயர் என்ற பிரிவினரில் சிலரும், வேத வல்லுனர்கள் என்று கருதப்பட்ட சிலரும், இயேசு விடம் குற்றம்பிடிக்கும்படி வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி ஏது உண்டோ, அதைக் கொர் பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட் டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்ப ரியத்தினால் தேவ வசனத்தை அவ மாக்குகிறீர்கள் என கடிந்து கொண் டார். பெற்றோரை கனம் பண்ணுவ தென்பது, அவர்களுக்குரிய கடமை களை செய்து, சொந்த பந்தங்கள் மத்தியிலும், ஊர், உலகிலும் நற்பெ யர் சம்பாதிப்பதல்ல.  தேவனில் அன்பு கூராமல் அவரை ஒருவன் கனம் செய்ய முடியுமோ? அன்பில்லா கனம் வெறும் முகஸ்துதியாக இருக்கும். தங்கள் வாழ்க்கையின் சௌகரியங்களே முதன்மையானது, பெற்றோர் விவகாரங்களை கவனிப்பது, தடையில்லாமல் இருக்கும் என்றால் மட்டுமே அவர்களை கவனிப்போம் என்று பலர் வாழ்கின்றார்கள். உன் பகைவரை நேசி என்று இயேசு கூறினார். பெற்றோரை அன்பு செய்யமுடியாதவன் தன் பகைஞனை எப்படி அன்பு செய்வான்? உள்ளந்திரியங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் உங்கள் நிலையை நன்கு அறிவார். எனவே நன்மை பெருகும்படிக்கு தேவனுக்கு முன்பாக  உண்மையுள்ளவர்களாயிருங்கள். 

ஜெபம்:

அன்புள்ள தேவனே, நீர் எனக்கு தந்த பெலத்தின்படி, எனக்கு ஒப்புவிக்கப்பட்ட விவகாரங்களை, மனதார,  திறம்படச் செய்து முடிக்க, தூய ஆவியானவரின் வழிடத்துதலைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 7:10-13