புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 04, 2018)

அன்புள்ளவரை அன்பு செய்யுங்கள்

மாற்கு 12:30

உன் தேவனாகிய கர்த்த ரிடத்தில் உன் முழு இரு தயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன் புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.


சகலமும் படைத்த தேவனாகிய கர்த்தர் உங்களில் அன்பாயிருக்கின் றார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் நித்திய ஜீவனை அடையும்படி, தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அவரை நாங்கள் அறியும் முன்பே, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவ ங்களை நிவிர்த்திசெய்கிற பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதி னாலே அன்பு    உண்டாயிருக்கிறது. இந்த அன்பு, எங்கள் வாழ்க்கையிலே, அழி யாத நித்திய பலனை கொடுக்க வேண் டும் என்றால், நாங்களும் தேவனை அன்பு செய்ய வேண்டும். பிரியமான வர்களே, நீங்கள் தேவனை அன்பு செய் கின்றீர்களா? அவரிலே அன்பாயிருக்கி றவன், அவருடைய கட்டளைகளை மன தார தன் வாழ்க்கை யிலே கைக்கொ ள்கின்றான். தேவ கட்டளைகள், நாங் கள் தூய வாழ்க்கை வாழ்;ந்து, தேவ னுடைய சித்தத்தை நிறைவேற்றுவ தற்கு உதவியாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதுவே சத்திய வேதம்! அந்த வழியிலே நித்திய வாழ்வு உண்டு. நீங்கள் தேவனை அன்பு செய்கின்றீர்களா என்று உங்களை, நீங்கள் வேத வார் த்தைகளின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கலாம். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்;, தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்? என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. தேவன் உங்க ளில் அன்பாயிருக்கின்றார் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அந்த அன்பு எங்கள் வாழ்க்கையில் பூரண கனியை கொடுக்கும்படி, தேவனை நீங்கள் அன்பு செய்யுங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, நான் உம்மை அறியாத நாட்களிலே என்னை நீர் நேசித்தீர். நித்திய வாழ்வு தரும் உம் கட்டளைகளை நான் கைக்கொண்டு நடக்க உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:7-21