புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 03, 2018)

யாரை நேசிப்பீர்கள்?

லூக்கா 6:35

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங் கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைக ளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,


எங்கள் நாளாந்த வாழ்க்கையிலே பல மக்களைச் சந்திக்கின்றோம். இவர்களுள்;  எங்கள் சொந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், அறிமுகமானவர்கள், சக வேலையாட்கள், சக மாணவர்கள், அந்நியர்கள் அடங்குவார்கள்.  இவர்கள் பொருளாதார ரீதியிலே, சமுக அந்தஸ்திலே, செய்யும் தொழிலிலே பல நிலைகளில் இருக்கலாம். சிலர் உங்களை  சிநேகிக்கின்றவர்களாவும், வேறு சிலர் உங்களை பகைக்கின்றவர்களாகவும் இருக்கலாம். நன்மை செய்யும்படி இவர்களில் யாரை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்? உங்களை நேசிக்கின்றவர் களை மட்டுமா? அல்லது உங்களை பகைக்கின்றவர்களுக்கும் நன்மை செய் வீர்களா? பொதுவாக மனிதர்கள் தங் களுக்கு விருப்பமானவர்களுக்கு மட் டுமே நன்மை செய்ய விரும்புகின்றா ர்கள். இயேசு சொன்னார்: உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகி த்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர் களைச் சிநேகிக்கிறார்களே.  உங்களு க்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங் கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.  நன்மை செய்வதென்று கூறும்போது, யாவரின் வழிகளையும், போக்குகளையும் நாங்கள் மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பொருள் அல்ல. எங்கள் வழிகள் சில வேளைகளிலே தேவனுக்கு ஏற்புடையதாக இல்லாதிருந்த போதிலும், அவர் எங்களுக்கு நன்மை செய்து வருகின்றார். எனவே உங்களை பகைக்கின்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

ஜெபம்:

பரலோக பிதாவே, எனக்கு தீமை செய்கின்றவர்களை வெறுக்காமல், அவர்களை மன்னித்து, மனதார அவர்களுக்கு நன்மை செய்யும்படியான உண்மையுள்ள இதயத்தை எனக்கு தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:14-21