புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 29, 2018)

நம்பத்தக்கவர்களாயிருங்கள்

1 யோவான் 4:21

தேவனிடத்தில் அன்புகூ ருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.


தன் பிள்ளைகள் படிப்பதற்காக ஒரு கம்யூட்டரை கொள்வனவு செய்வதற்காக, தங்களை ஒறுத்து, பல மாதங்களாக பெற்றோர் சேமித்து வந்தார்கள். கம்யூட்டரை குறித்து அறியும்படி எந்த வாய்ப்பும் கிடை க்காத, தந்தை, கம்யூட்டரை கொள்வனவு செய்யும்படி கடைக்கு சென்றார். அந்த இடாம்பீகமான கடை யிலே, ஒரு விற்பனை முகவர், இவரு க்கு உதவி செய்யும்படி வந்தார். விற் பனை செய்யும் ஒவ்வொரு கம்யூட்ட ருக்கும், அந்த விற்பனை முகவருக்கு, சேவைக் கட்டணம் உண்டு. அங்குள்ள பார்வைக்கு அழகான கம் யூட்டர் ஒன்றில் இருந்த குறைபாட் டைக் குறித்து எதுவும் சொல்லாமல், அந்த மனிதனுக்கு அதை விற்றுவி ட்டார். கடுமையாக உழைத்து சேமித்து, பிள்ளைகளுக்கு நல்லதை கொடுக்க வேண்டுமென்றிருக்கும் போது, இப்படியான சம்பவம் உங்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?   எப்படியாவது பொருட்களை விற்றுவிடுபவனை ஒரு நல்ல விற்பனை முகவர் என்று இந்த உலகம் அழைக்கலாம். ஆனால் அநியாயம் எல்லாம் பாவம் என்று வேதம் கூறுகின்றது. பொருட்களில் மட்டுமல்ல, இந்த உலக போக்குகளின் தந்திரங்களை அறியாமல், இருக்கும் மனிதர்கள். தங்கள் வாழ்க் கையில் முக்கியமான முடிவுகளை எடுக்க, உங்களிடம் ஆலோசனை கேட்கும் போது, அவர்களுக்கு உண்மையாயிருங்கள். அது திருமண ஒப்பந் தமாகவோ, கல்வி வேலை சம்மந்தமாகவோ இருக்கலாம், தேவனுக்கு முன்பாக உண்மையைப் பேசுங்கள்.  நீங்கள் அறிந்ததை அறியாததைப் போலவும், அறியாத விடயங்களை அறிந்த துபோலும் பேசாதிருங்கள். உங்களை நம்பி வருகின்றவர்களுக்கு, உங்களுக்கு தற்காலிக நஷ்டம் வந்தாலும் தேவ அன்பை வெளிப்படுத்துங்கள்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, எங்களை நம்பி வருகின்றவர்களுக்கு நாங் கள் எந்த விதத்திலும் துரோகம் செய்யாமல், அவர்களுக்கு உம்முடைய அன்பை வெளிப்படுத்த என்னை உணர்வுள்ளவனாக்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 3:27-30