புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 26, 2018)

ஞானமுள்ளவர்கள் யார்?

நீதிமொழிகள் 12:15

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவி கொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.


தகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்த நாட்களில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எந்த ஒரு காரியத்தைக்குறித்த தரவுகளையும், தகவல்களையும் சுலபமாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதால், இது உலக அறிவு பெருத்த காலம் என்று மனிதர்கள் கருதுகின்றா ர்கள். இளம் சந்ததிகள் மட்டத்திலும் “எனக்கு எல்லாம் தெரியும்” என்ற மனநிலையை பரவலாக காணக் கூடியதாக இருக்கின்றது. இதனால் மனிதர்கள் இன்று ஆலோசனைகளை அலட்சியம் செய்கின்றார்கள். உலக அறி வின் பெருக்கத்தினால் எந்த மனித னும் தேவனுடைய செயல்களை அறி ந்து கொள்ள முடியாது. ஆலோசனை யில்லாத இடத்தில் ஜனங்கள் விழு ந்து போவார்கள்; அநேக ஆலோச னைக்காரர் உண்டானால் சுகம் உண்டா கும் என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். எந்த ஒரு செயலையும் முன்னெடுத்துச் செல்ல முன், சிந்தித்து செயலாற்ற வேண்டும். முதலில் நீங்கள் அறிந்த தேவ வார்த்தைகளின்படி, அந்த செயலை சோதித்து அறிய வேண்டும். அவற்றை தேவ சமுகத்திலே ஜெபத்திலே ஏறெடுக்க வேண்டும். உங் களை நடத்தும் போதகரிடம், ஆவிக்குரிய நண்பர்கள், சகோதரர்களி டம் அவர்களின் கருத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவ ற்றிலும் பொறுமையை காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்று பலர், ஆலோசனை கேட்கப் போனால் ஒன்றும் செய்ய முடியாது என்று, பலவிடயங்களை இந்த உலக அறிவின்படி நடப்பித்து, பாரிய பின்விளைவுகளுடன் வாழ்கின்றார்கள். இதனால் தேவனை அறியாத ஜனங்கள் மத்தியிலே நற்சாட்சியை இழந்து போகின்றார்கள். எனவே, ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கு செவிகொடுங்கள். தற்போது அவை கள் கடினமாக இருந்தாலும், முடிவிலே நித்திய இன்பம் உண்டு.

ஜெபம்:

பரலோக தேவனே, உலக அறிவின் பெருக்கத்தில் இழுப்புண்டு, உம்முடைய வாழ்வு தரும் ஆலோசனைகளை மறந்து, துன்பத்தை சம்பாதிக்காதபடிக்கு என்னை உணர்வுள்ளவனாய்(ளாய்) மாற்றும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 15:22