புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 25, 2018)

நித்திய வாழ்வின் ஒரே வழி

1 தீமோத்தேயு 2:5-6

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒரு ரே. எல்லாரையும் மீட்கும்  பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;.


நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப் பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.  ஒரு வன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார் கள்; அவைகள் எரிந்துபோம் என்று இயேசு சொன்னார். பரலோகம் சென் றடைவதற்கு மனித குலத்திற்கு கொடு க்கப்பட்ட ஒரே ஒரு வழி இயேசு! இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனு மாயிருக்கின்றார். அவரையல்லாம் ஒரு வரும் பரலோக பிதாவினிடத்தில் சேர முடியாது. பிதாவினிடத்திற்கு சேருவத ற்கு வேறு ஒரு வழியுமில்லை. எப்படி இயேசுவிடம் சேரமுடியும்?  “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத் தில் வரமாட்டான்;” என்று இயேசு கூறினார்.  எனவே இயேசுவிடம் சேரு வதற்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. இந்த பூமியிலே, தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக வாழும் தேவனுடைய ஊழியர்களே, நாங்க ளும் இயேசுவிடம் சேருவதற்கு கருவிகளாக இருந்திருக்கலாம். இந்த பூமியிலே அவர்களின் நாட்கள் முடிந்ததும், அவர்கள் கடந்து செல்கி ன்றார்கள். இந்த பாவ உலக வழிகளில் இழுக்கப்பட்டுபோகாமல், இயேசுவோடு வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை எங்களுக்கு சாட்சியாக மாறுகின்றது. அவர்களுடைய தியாகமான வாழ்க்கைக்காக, இயேசு கிறிஸ்து வழியாக நன்றி செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் எங்க ளுக்கும் தேவனுக்குமிடையில் மத்தியஸ்தர்களாக இருக்க முடியாது. தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் இயேசு கிறிஸ்து ஒருவரே.

ஜெபம்:

இரக்கமுள்ள பிதாவே, நீர் எங்களுக்காக வைத்திருக்கின்ற, பரிசுத்தவான்களின் திரளான சாட்சிகளுக்காக நன்றி. அவர்கள் இயேசுவை பின்பற்றி வாழ்ந்ததுபோல நாங்களும் இயேசுவை சார்ந்து வாழ கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:44

Category Tags: