புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 24, 2018)

வஞ்சனை வேண்டாம்

நீதிமொழிகள் 20:17

வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடையவாய் பருக்கைக்கற்களால் நிரப்பப்படும்.


நாங்கள் காண்கின்ற சகலமும், நாங்கள் காணாத மறைபொருட்கள் யாவும் இயேசு மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவரா லேயல்லாமல் உண்டாகவில்லை. அவர் பாவம் அறியாத பரிசுத்தர், மனிதகுலம் மீட்படையும்படியாய், பரலோகத்தைவிட்டு இறங்கி, தன்னைத் தாழ்த்தி, மனு உரு எடுத்தார். அவருடைய வாயில் எந்த வஞ்சனையும் இல்லை. எந்த வஞ்ச னையான செயலிற்கும் பிசாசானவனே தந்தையாக இருக்கின்றான். ஏதேன் தோட்டத்திலே, பரிபூரணமான வாழ் க்கை வாழ்ந்த ஏவாளை, தன் தந்திர மான செயலினாலே வஞ்சித்தான். அந்த  வஞ்சனைக்கு   கீழ்ப்படிந்ததால் வந்த  இன்பம் தற்காலிகமானது. ஆனால் அதனால் வந்த நோவு நீடித்த நாட்க ளாய் இருக்கிறது. தேவ நியமங்களு க்கு எதிராக சேர்க்கும் பணமும் பொரு ளும் வஞ்சனையானது. அதாவது இன்னுமொருவரையோ அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ வஞ்சிப்பதால் ஏற்படும் இலாபம் வஞ்சனையானது. வஞ்சனையினால் வந்த ஆதாயங்கள் மனு~னுக்கு தற்காலி கமான திருப்தியை கொடுக்கும். இப்படிப்பட்ட ஆதாயங்களால் பெரு மைப்படுகிறவர்கள் உண்டு. அதாவது, வஞ்சனையான எந்த செய லிலும்,  தற்போது இன்பமும், பின்  நீடித்த துன்பமும் தொடரும். விதைத்தவன் தன் விளைச்சலின் பலனைக் காண சில காலங்கள் பொறுமையாக இருப்பான். நல்ல விதைகளை விதைத்து பிரயாச ப்பட்டவன் அதின் பலனையும், வஞ்சனையை விதைத்தவன் அதன் பின்விளைவையும் அறுப்பான். அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வ த்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. எனவே நட்டம் வந்தாலும் வஞ்சனையான செயல்களுக்கு இடங்கொ டாதிருங்கள்.

ஜெபம்:

நீதியுள்ள பிதாவே, வஞ்சனையான இழிவான ஆதாயத்திற்கு எந்த விதத்திலும் உடன்படாதபடிக்கு, தேவ நீதியை எப்போதும் நிறை வேற்றுகின்றவனாக நான் வாழ உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:25