புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2018)

வழிநடத்தும் ஆவியானவர்

சங்கீதம் 119:130

உம்முடைய வசனத்தின் பிரசித்தம்  வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.


கடைசி காலத்திலே விசுவாசிகளை வஞ்சிக்கும் பொய்யான போத னைகளை போதிப்பவர்கள் எழும்புவார்கள் என பரிசுத்த வேதாகமத் தினாலே எச்சரிக்கப்பட்டிருக்கின்றோம். அந்த போதனைகளை இனங் கண்டு அந்த கண்ணிகளுக்குள் சிக்கிக் கொள்ளாதபடி எங்களை நாங் கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து இல்லா மல் ஒருவரும் பிதாவினிடத்திற்கு சேர முடியாது. (யோவான் 14:6). இயேசு கிறி ஸ்துவே இரட்சகர் என்பதை விசுவாசிக் காமல் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள முடியாது. (யோவான் 14:15-31). இயேசுவின் நாமத்தினாலே பிதா எங் களுக்கு தந்த பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் எங் களுக்குப் போதித்து, இயேசு கூறிய வார்த்தைகள் எல்லாவற்றையும் எங்களுக்கு நினைப்பூட்டுகிறார். சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;. பரிசுத்த ஆவியானவர் இயேசுவினிடத்திலிருந்து எடுத்து உங்களுக்கு அறி விப்பதினால் அவர் இயேசுவை மகிமைப்படுத்துவார். (யோவான் 16: 13-15). இவை தேவனுடைய வாக்குத்தத்தங்கள். வேதத்தை புரட்டுகின்ற வர்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்து, தமக்கு கேடுண்டாக புர ட்டுகின்றார்கள். எனவே, நீங்கள் வேதத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.  வேதத்தை கருத்துடன் வாசியுங்கள். புதிய ஏற்பாட்டிலு ள்ள புத்தகங்களை முதலில் வாசிக்க ஆரம்பியுங்கள். பின்பு மற்றய புத்தகங்களை தொடர்ந்து வாசியுங்கள். விளங்காதவற்றை குறிப் பெடுங்கள். அவற்றை விளங்கப்படுத்தும்படி கருத்துடன் ஜெபியுங்கள். தேவ ஆவியானவர் அதற்குரிய வழிகளை திறந்து தருவார். வேதத் திலுள்ள இரகசியங்களை நன்கு புரிந்து கொள்ளும்படி வழிவகுப்பார். இப்படியாக நீங்கள் தேவனுக்குள் வளரும் போது, எந்தப் பொய் யான உபதேசத்தையும் நீங்கள் இனங்கண்டு கொள்வீர்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, உம்முடைய வேதத்திலுள்ள இரகசியங்களை நன்கு புரிந்துகொள்ள ஞானத்தையும், அதைக் கைகொள்ளத்தக்கதான மனப்பக்குவத்தையும் தந்து என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 2:6-7

Category Tags: