புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 19, 2018)

நேர்மையான தராசு

நீதிமொழிகள் 20:14

கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய் விட்ட பின்போ மெச்சிக் கொள்வான்.


தன்னுடைய சிறிய வீட்டுத் தோட்டத்திலே விளைந்த சில காய் கறிகளை, விற்பதற்காக சந்தையின் முன்னால் இருக்கும் நடைபா தையில், தன் கடகத்தோடு உட்கார்ந்து கொண்டாள் ஒரு பெண்மணி. எப்படியாவது இருப்பதெல்லாவற்றையும் விற்றால், அந்த கிழமைக் குரிய தேவைகளை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தாள். இவளின் சிறுமையை அறிந்தும், பல மனிதர்கள் எப்படியாவது, பேரம்பேசி, மரக்கறிகளை  குறைந்த விலைக்கு வாங் கிக் கொள்வார்கள். வெறுங்கை யோடே வீடு திரும்புவதிலும் கொஞ் சப் பணத்தோடே திரும்புவது நல்லது என்ற ஏக்கத்தில். அவைகளை கேட் கும் விலைக்கு விற்று விடுவாள். பல மனிதர்கள் இன்று தந்திரமாக, பொரு ட்களை பேரம்பேசி விலையை குறைத்துக் கொள்வார்கள். தங்க ளுக்கு பிடித்த குறிப்பிட்ட பொருளை, வேண்டா வெறுப்புடன் பார் த்து, அதைபற்றி அதிகம் தெரிந்தவர்கள் போல, அதின் குறைகளை மிகைப்படுத்தியும், அதினால் வரும் நன்மைகளை குறைவு படுத்தியும் தங்கள் இதயத்திற் கேற்ற விலையில் அதை கொள்வனவு செய்து கொள்வார்கள். அப்பாலே போனபின்பு, தங்களின் பேரம்பே சும் செயற்திறனை குறித்து மற்றவர்களுடன் பெருமிதமாகப் பேசி, தங்க ளையே தாங்கள் மெச்சிக் கொள்வார்கள். இவற்றை பிரபல்யமான வியாபாரிகளுடன் செய்ய மாட்டார்கள் ஆனால் எப்படியும் பொரு ட்களை விற்கவேண்டும் என்ற இக்கட்டான நிலையிலுள்ளவர்களிடமே இப்படியாக நடந்து கொள்வார்கள். பிரியமானவர்களே, இப்படிப்பட்ட செயல்கள் உங்களுக்கு தூரமாயிருப்பதாக. தன் இக்கட்டில் பொருட் களை விற்கிறவர்களிடம் பெரும் இலாபத்தை எதிர்பார்க்காதிருங்கள். தன்னுடைய இக்கட்டில் தவிக்கிறவனிடத்தில் பேரம் பேசாதிருங்கள். நீதியான தராசு விற்கின்றவர்களிடத்தில் மட்டுமல்ல கொள்வனவு செய்கின்றவர்களிடத்திலும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, எந்த விதத்திலும் அநீதியான வியாபா ரத்திற்கு உடன்படாமல், நீதியின் வழியில் வரும் பிரயாசத்தையே வாஞ்சித்து நடக்க எனக்கு அருள்புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 22:16

Category Tags: