புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 18, 2018)

உணர்வுள்ள உள்ளம்

மத்தேயு 13:16

உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.


கர்த்தருடைய வசனங்களை கேட்கும்போது, அதை அசட்டைபண்ணி விடுகின்றவர்களின் மனக்கண்கள் குருடுபட்டுவிடுகின்றது. இதனால் தேவனுடைய செயல்களை இவர்கள் கண்டாலும், அவருடைய மீட் பின் வார்த்தைகளை கேட்டாலும் அதை உணரமுடியாமல், அவர்க ளின் இருதயம் உணர்வற்று போய்விடுகின்றது. கர்த்தராகிய இயேசு இந்த பூமியிலே வாழ்ந்த நாட்களில், எண்ணுக்கடங்காத அற்புதங்களை செய்திருந்தார். முடிவில்லாத வாழ்வைப் பெறும் வசனங்களை போதித்திருந்தார். அந்த செய்திகள் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியிலே மறை பொருளாக இருக்கவில்லை. ஆனாலும் அன் றைய நாளிலிருந்த பல மதத்தலைவர்கள், அவர்களை சார்ந்த அதிகாரி கள், ஜனங்கள் யாவரும். தங்கள் கண் காண்பதையும், காது கேட்ப தையும் உணராமலும் இருக்கும்படியாய் துணிகரம் கொண் டார்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளா மலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர் களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது. காதால் மந்தமாய்க்கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இயேசு சொன்னார். ஒருவன், தேவனுடைய ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கு ம்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்;. பிரியமானவர்களே, இன்று தேவனு டைய வார்த்தைகளை ஆர்வமாக படிக்கின்றவர்களாக இருந்தால். நீங்கள் பாக்கியவான்களும், பாக்கியவதிகளுமாயிருக்கின்றீர்கள். ஏனெனில், கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தரே அருளினார். எனவே சோர்ந்து போகாமல், ஆர்வத்துடன் படியுங்கள். 

ஜெபம்:

சகலமும் படைத்த தேவனே, உம்முடைய திவ்விய வார்த்தைகளில் மட்டுமே,  நித்திய ஜீவன் உண்டு என்னும் உண்மையை எனக்கு வெளிப்படுத்தியதிற்காய் உமக்கு நன்றி. தொடர்ந்தும் என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 20:12